rahul: narendra modi: மோடியைப் பார்த்து பயமா! பாஜக என்ன வேணும்னாலும் செய்யட்டும்! நெஞ்சை நிமர்த்திய ராகுல்

By Pothy RajFirst Published Aug 4, 2022, 2:25 PM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து நாந் பயப்படவும் இல்லை, நேஷல் ஹெரால்டு வழக்கில் நான் மிரட்டப்படவும்மாட்டேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூலாகப் பதில் அளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து நாந் பயப்படவும் இல்லை, நேஷல் ஹெரால்டு வழக்கில் நான் மிரட்டப்படவும்மாட்டேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூலாகப் பதில் அளித்துள்ளார்.

நேஷல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தியது. 

நேரு,வாஜ்பாய் முட்டாள்தனத்தால் தெபெத், தைவானை இழந்தோம்: சுப்பிரமணியன் சுவாமி விளாசல்

இந்த விசாரணையைடுத்து, நேற்று முன்தினம் அசோசியேட் ஜர்னலுக்கு சொந்தமான இடங்கள்,நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கப்பிரிவு சோதனை நடத்தியது. இந்நிலையில் திடீரென அமலாக்கப்பிரிவு, நேஷனல் ஹெரால்ட் அலுவலகத்துக்கு சீல் வைத்தது. 

இதனால் கர்நாடகாவில் பயணத்தில் இருந்த ராகுல் காந்தி, தனது பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார். நேஷனல் ஹெரால்டு அலுவலகம் சீல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சோனியா காந்தி இல்லம், காங்கிரஸ் அலுவலகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். நீண்ட நேரத்துக்குப்பின்புதான் போலீஸார் அங்கிருந்து சென்றனர். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அறிவிக்கப்படாத அவசரநிலை; எங்களை தீவிரவாதிகள் போல் மத்திய அரசு நடத்துகிறது: காங்கிரஸ் கட்சி குமுறல்

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேஷல் ஹெரால்டு வழக்கில் முதல் முறையாக இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். 

அப்போது அவர் கூறுகையில் “ நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தை சீல்வைத்த செயல் என்பது எங்களை மிரட்டும் முயற்சி. நாங்கள் மிரட்டப்படமாட்டோம். நாங்கள் நரேந்திரமோடியைப் பார்த்து பயப்படவும்மாட்டோம். மத்திய அரசு தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறதோ அதைச்செய்யட்டும். இதெல்லாம் ஒரு விஷயமல்ல.

இந்த தேசத்தையும், ஜனநாயகத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க நான் தொடர்ந்து உழைப்பேன். மத்திய அரசு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், நான் என்னுடைய  பணியைத் தொடர்ந்து செய்வேன். 

அடுத்த தலைமை நீதிபதி இவர்தானா! வரலாற்று சிறப்பு தீர்ப்புகளை வழங்கியவர்

உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது, தடைபோட முடியாது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். எங்கள் மீது அழுத்தம், நெருக்கடி அளித்தால், நாங்கள் அமைதியாகிவிடுவோம் என்று பாஜக அரசு நினைக்கிறது. ஆனால், நாங்கள் அமைதியாகமாட்டோம். 

இந்ததேசத்தில் நரேந்திர மோடி, அமித் ஷா இருவரும் செய்யும் செயல், ஜனநாயகத்துக்கு எதிரானது. அது எதுவாக இருந்தாலும், அதற்கு  எதிராக நாங்கள் குரல் கொடுப்போம்
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்


 

click me!