பீகாரில் ஜெயிக்க காங்கிரஸ் வியூகம்! மாநில அரசுக்கு எதிராக இளைஞர்களுடன் ராகுல் காந்தி பேரணி!

பீகாரில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்காத மாநில அரசை கண்டித்து ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் ராகுல் காந்தி பேரணியாக சென்றார்.

Rahul Gandhi leads rally with thousands of youth against unemployment in Bihar ray

Rahul Gandhi rally against unemployment in Bihar: பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நிதிஷ்குமார் முதல்வராக இருந்து வருகிறார். பீகாரில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விட்டன. 

பீகாரில் வேலைவாய்ப்பின்மை 

Latest Videos

மேலும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. பீகாரில் வேலைவாய்ப்பின்மை காலம் காலமாக இருந்து வரும் பிரச்சனையாகும். பீகாரில் வேலை இல்லாததால் அங்குள்ள இளைஞர்கள் வேலை தேடி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பீகாரில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்காத ஆளும் அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பீகாரின் பெகுசராய் நகரில் இன்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. காங்கிரஸ் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தேசிய பொறுப்பாளர் கன்னையா குமார் தலைமையில் இந்த நடந்த இந்த பேரணியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்பட அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொணடனர்.

 

ராகுல் காந்தி பேரணி 

மேலும் இளைஞர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களும் ராகுல் காந்தியுடன் இணைந்து மாநில அரசுக்கு எதிராக பேரணியாக சென்றனர். ''மாநில அரசு பீகாரில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நமது இளைஞர்கள் வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிலையை அரசு போக்க வேண்டும்'' என ராகுல் காந்தி உள்பட பேரணியில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் பல ஆண்டுகள் முதல்வராக இருந்தும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்காத பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிராகவும் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இந்த பேரணியில் பங்கேற்ற ராகுல் காந்தி அது தொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். மேலும் ''பீகார் இளைஞர்கள் மத்தியில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. வேலை வாய்ப்புகள் மற்றும் ஆதரவை வழங்காத அரசாங்கத்தின் மீது அவர்களுக்கு கோபம் உள்ளது.

இதுகூட தெரியாதா? பாம்பனில் மோடியின் பேச்சுக்கு ப. சிதம்பரம் பதிலடி!

பீகார் இனி அமைதியாக இருக்காது

'இடம்பெயர்வதை நிறுத்துங்கள் வேலை கொடுங்கள்' என்ற பேரணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உணர்வுகள், வேதனைகள் மற்றும் உறுதிப்பாடுகள் இன்று பெகுசராய் வீதிகளில் தெளிவாக தெரிந்தது. வேலையின்மை மற்றும் இடம்பெயர்வுக்கு எதிரான இந்தக் குரல் இப்போது மாற்றத்திற்கான அழைப்பாக மாறியுள்ளது. பீகார் இனி அமைதியாக இருக்காது, அதன் இளைஞர்கள் அநீதியை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் - அது அதன் உரிமைகள், வேலைவாய்ப்பு மற்றும் நீதிக்காக தைரியமாக போராடும்'' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அம்பானி குடும்பத்தின் அன்டிலியா வீட்டைக் காலி செய்ய புதிய நெருக்கடி!

vuukle one pixel image
click me!