இந்தியா முழுவதும் என் வீடுதான்! 4 மாதங்களுக்குப் பின் பழைய எம்.பி. பங்களாவுக்குத் திரும்பும் ராகுல் காந்தி!

By SG Balan  |  First Published Aug 8, 2023, 3:38 PM IST

தலைநகர் டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள வீட்டை ஏப்ரல் 22ஆம் தேதி காலி செய்தார். 2004 ஆம் ஆண்டு எம்.பியாக ஆன ராகுல் காந்தி, 2005 ஆம் ஆண்டு முதல் இந்த பங்களாவில் குடியிருந்து வந்தார்.


மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அரசு ஒதுக்கிய பங்களாவை 30 நாட்களுக்குள் காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு மக்களவை வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, அவர் தலைநகர் டெல்லியில் துக்ளக் சாலையில் உள்ள வீட்டை ஏப்ரல் 22ஆம் தேதி காலி செய்தார்.

2004 ஆம் ஆண்டு எம்.பியாக ஆன ராகுல் காந்தி, 2005 ஆம் ஆண்டு முதல் இந்த பங்களாவில் குடியிருந்து வந்தார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் அவரைக் குற்றவாளி என அறிவித்து, 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கியது.

Latest Videos

undefined

தக்காளி திருட்டைத் தடுக்க வித்தியாசமான ஐடியா! வயலில் சிசிடிவி கேமரா பொருத்திய ஹைடெக் விவசாயி!

2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் சட்டப்படி, எம்.பி. பதவியில் நீடிக்க முடியாது என்பதால்,  அவரை மக்களவைச் செயலகம் தகுதிநீக்கம் செயதது. இதன் எதிரொலியாக சுமார் 20 ஆண்டுகளாக வசித்துவந்த வீட்டை ராகுல் காந்தி காலி செய்ய நேரிட்டது.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது, சூரத் அமர்வு நீதிமன்றத்திலும், குஜராத் உயர் நீதிமன்றத்திலும் அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் அவர் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நேற்று (திங்கட்கிழமை) அவரது தகுதிநீக்க உத்தரவை திரும்பப் பெறுவதாக மக்களவைச் செயலகம் அறிவித்தது. இதன் மூலம் நேற்று முதல் அவர் மீண்டும் வயநாடு தொகுதி எம்.பி.யாக நாடாளுமன்ற நடவடிக்கையில் பங்கெடுக்கிறார்.

நிலவுக்கு 100 கி.மீ. தொலைவில் சந்திரயான்-3... இஸ்ரோவுக்கு இனிதான் பெரிய சவால் காத்திருக்கு!

click me!