காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின்போது ஏன் டி-ஷர்ட் மட்டும் அணிகிறார் என்பது எதிர்க்கட்சிகள், பல்வேறு விமர்சகர்கள் வைக்கும் கேள்வியாக இருக்கும் நிலையில் அதற்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின்போது ஏன் டி-ஷர்ட் மட்டும் அணிகிறார் என்பது எதிர்க்கட்சிகள், பல்வேறு விமர்சகர்கள் வைக்கும் கேள்வியாக இருக்கும் நிலையில் அதற்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியதோ இல்லையோ அவர் அணிந்து நடக்கும் டி-ஷர்ட் பெரும் சலசலப்பை எதிர்க்கட்சி்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
அதிலும் கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரிலும் ஏன் ராகுல் காந்தி ட்-ஷர்ட் மட்டும் அணிகிறார் என்ற கேள்வி பலதரப்பிலும் எழுப்பட்டது. இதில் உச்ச கட்சமாக பாஜக ராகுல் காந்தியின் டி-ஷர்ட் படத்தை ட்விட்டரில் பதிவிட்டு அவர் அணிந்திருக்கும் டி-ஷர்ட் ரூ.41 ஆயிரம் விலை மதிப்புள்ளது என்று சர்ச்சையை ஏற்படுத்தியது. ட்விட்டரிலும் ராகுல் காந்தியின் டி-ஷர்ட் குறித்து தேடத் தொடங்கினார்கள்.
சில மாதங்கள் ராகுல் காந்தியின் டி-ஷர்ட் பேச்சு அடங்கியிருந்தநிலையில் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. வடமாநிலங்களில் கடும் குளிரிலும் ஏன் ராகுல்காந்தி ஸ்வெட்டர் அணியவில்லை, டி-ஷர்ட் மட்டும் அணிகிறார் என்று கேள்வி எழுந்தது.
7 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா அடுத்த 7 ஆண்டுகளில் மாறும்: ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை
இந்த கேள்விக்கு ஹரியானாவில் நேற்று ராகுல் காந்தி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் எனது யாத்திரையில் டி-ஷர்ட் மட்டும் அணிவது குறித்து பலரும் கேள்வி கேட்கிறார்கள், ஊடகங்களில் விவாதித்தார்கள். ஏன் நான் வெள்ளைநிற டி-ஷர்ட் மட்டும் அணிகிறேன், எனக்கு குளிரவில்லையா என்றெல்லாம் கேட்கிறார்கள். கேரளாவில் நடைபயணம் தொடங்கும்போது சற்று வெப்பமாக இருந்தது, மத்தியப்பிரதேசம் வந்தபோது குளிரத் தொடங்கியது.
இந்த யாத்திரையின்போது, 3 ஏழைச் சிறுமிகள் கிழிந்த ஆடைகளுடன் குளிரில் நடுங்கியபடி என்னிடம் பேசினார்கள். அவர்களைப் பார்த்தபோது அவர்களுக்கு முறையான ஆடையில்லாமல், குளிரில் நடுங்கியபடியே என்னிடம் பேசினார்கள். அப்போது நான் முடிவு எடுத்தேன் யாத்திரை முடியும்வரை டி-ஷர்ட் அணிய முடிவு செய்தேன். எனக்கு குளிரக்கூடாது, குளிர்அடித்தாலும் டி-ஷர்ட் அணிவேன் என்று முடிவு செய்தேன்
அவரை கொன்றுவிட்டேன், நீங்கள் பார்ப்பது அந்த ராகுல் அல்ல: புதிர் போட்ட ராகுல் காந்தி
அந்த 3 சிறுமிகளுக்கும் ஒரு செய்தியைக் கூற விரும்புகிறேன். உங்களுக்கு குளிரில் உடல் நடுக்கம் ஏற்படும்போது எனக்கும் நடுக்கம் எடுக்கும். உங்களுக்கு ஸ்வெட்டர் அணிந்து கொள்ளும் சூழல் வரும்போது, நானும் ஸ்வெட்டர் அணிந்து கொள்வேன்
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்