
டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு சென்ற காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் டெல்லியில் பிரதான பகுதியான ஜந்தர் மந்தரில் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தின் பொது ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ராம்கிஷன் என்னும் முன்னாள்ராணுவ வீரர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் டெல்லி சட்டமன்றத்திற்கு எதிரிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்னும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென கூறி சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக சார்பில் மோடி இத்திட்டத்தை நிறைவேற்றி தருவதாக வாக்குறிதி அளித்திருந்தார்.இதனை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் தற்கொலை செய்த கொண்ட ராணுவ வீரர் ராம் கிஷனின் உடல் டெல்லி சவுத் அவென்யுவில் உள்ள பிரபல ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அலட்சியத்தால் நாட்டுக்காக பாடுபட்ட ராணுவ வீரரின் உயிர் பிரிந்து விட்டதாக கூறி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் பலர் மருத்துவமனைக்கு உள்ளே நுழைய முயன்றனர்.. அப்போது அங்கிருந்த டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தி பார்த்தனர்.
தடுப்பை மீறி ராகுல் காந்தி மற்றும் காங்கிரசார் உள்ளே செல்ல முயன்றதால் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி போலீஸ் கமிஷனர் காவல்துறையினர் தங்கள் பணியை செய்ய விடாமல் ராகுல் காந்தி தடுத்ததால் அவரை கைது செய்ய நேரிட்டதாக அவர் தெரிவித்தார்.
ராணுவ வீரர் தற்கொலை விவகாரத்தில் ராகுல் காந்தி கைது செய்யபட்டிருப்பது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ராகுல் காந்தியை உடனடியாக விடுவித்தனர்.