“நாட்டில் உள்ள ஏழை மக்களை பற்றி கவலைப்படாதவர் மோடி” – ராகுல் கண்டனம்

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 07:29 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
“நாட்டில் உள்ள ஏழை மக்களை பற்றி கவலைப்படாதவர் மோடி” – ராகுல் கண்டனம்

சுருக்கம்

நேற்றிரவு முதல் இந்தியாவில் 500ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்  செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்தநிலையில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டரில்,

மற்றொரு முறை, நாட்டில் உள்ள ஏழைகளை பற்றி கொஞ்சமும் கவலைப்படாததை மோடி வெளிக்காண்பித்துள்ளார். ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுள்ளதால், விவசாயிகள், ஏழை மக்கள் சிறு கடை உரிமையாளர்கள், குடும்ப தலைவிகள் குழப்பத்தில் உள்ளனர்.

உண்மையில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்கள், வெளிநாட்டில் பணத்தை பதுக்கி வைத்து விட்டு நிம்மதியாக உள்ளனர். அல்லது தங்க கட்டிகளாகவோரியல் எஸ்டேட்டிலோ தங்களது பணத்தை முதலீடு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், நரேந்திர மோடியிடம் தான் ஒரு கேள்வி கேட்க விரும்புவதாக கூறிய அவர், 1,000 ரூபாய்க்கு பதில் 2,000 ரூபாயை  கொண்டு வருவதன் மூலம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புபணத்தை எப்படி ஒழிக்கப்போகின்றீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு ஏழைகளைப் பற்றி கவலையில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Rs 12000 Scholarship: 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.12,000; இந்த அரசு ஸ்காலர்ஷிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?
Diwali Train Ticket Booking Opening: தீபாவளிக்கு ரயில்ல ஊருக்கு போறீங்களா?! முன்பதிவு தொடங்க போகுது.! மறந்துடாதீங்க.!