
117 சட்டசபை தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் 2.2 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 77, ஆம் ஆத்மி 20, அகாலி தளம் 15, மற்றவர்கள் 15, பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.கவின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்து இருந்ததை காண முடிந்தது.
ஆனால் பா.ஜ.க.வை விட பஞ்சாப்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசின் செல்வாக்குதான் அதிகம் உள்ளது. ஆட்சியை பிடிக்க காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 88 இடங்கள் வரை முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கப்போகிறது என்று தெரிகிறது.