#Breaking : பஞ்சாப் தேர்தல் தேதி மாற்றம்… இந்த தேதிக்கு ஒத்திவைப்பு… தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!!

By Narendran SFirst Published Jan 17, 2022, 2:59 PM IST
Highlights

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலை பிப்ரவரி 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலை பிப்ரவரி 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பும் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டுள்ளது. வரும் பிப். 10 ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு சில வாரங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த 5 மாநிலங்களில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வாக்குப்பதிவும் அதைத் தொடர்ந்து மார்ச் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் பிப்ரவரி 14 ஆம் தேதியில் இருந்து இரு நாட்களுக்கு பிறகு பிப்ரவரி 16 ஆம் தேதி குரு ரவிதாஸின் பிறந்தநாள் வருகிறது. அவரை பின்பற்றும் லட்சக்கணக்கான மக்கள் அவருக்கு மரியாதை செலுத்தப் புனித யாத்திரையை மேற்கொள்வார்கள் என்பதால் அவர்கள் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்படும் என்றும் இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாளை ஒத்தி வைக்க வேண்டும் என்றும்  பலர் கோரிக்கை விடுத்தனர்.

பஞ்சாப் வாக்குப்பதிவை 5 நாட்கள் ஒத்தி வைக்க வேண்டும் என முதல்வர் சரண்ஜித் சிங் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்ததை அடுத்து பஞ்சாப் சட்டசபைத் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது. அதை தொடர்ந்து பஞ்சாப் சட்டசபைத் தேர்தலை பிப்ரவரி 14 ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி மார்ச் 10 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!