ராகுலுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதிக்கு பதவி உயர்வு... உருவானது புதிய சர்ச்சை!!

By Narendran SFirst Published May 4, 2023, 7:11 PM IST
Highlights

ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச். ஹெச். வர்மாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச். ஹெச். வர்மாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச். ஹெச். வர்மா தீர்ப்பளித்தார். இதை அடுத்து ராகுலின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ராகுல் காந்தி தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டையும் காலி செய்தார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் அனுமன் ஆயுதம் பாஜகவுக்கு கை கொடுக்குமா? ஜன் கி பாத் - ஏசியாநெட் நியூஸ் சர்வே முடிவுகள்

மேலும் சிறை தண்டனைக்கு எதிரான ராகுல் காந்தியின் மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க: காங்கிரஸ் நிர்வாகியின் சகோதரர் வீட்டில் ஒரு கோடி பறிமுதல்... எங்க வச்சுருந்தாங்கனு தெரியுமா?

இந்த நிலையில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா தற்போது ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக நியமிக்கபப்ட்டுள்ளார். ராகுலுக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு பேசுபொருளாகியுள்ளது. 

click me!