
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, பஞ்சாப் வங்கியில் முறைகேடு செய்துள்ள நீரவ் மோடி மீது புகார் அளித்துள்ளார்.
பஞ்சாப் நேசனல் வங்கியில் உத்தரவாத கடிதம் மூலம் ரூ.11,400 கோடி மோசடி செய்த நீரவ் மோடி சுவிட்சர்லாந்து தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் தேடப்படுவதாக ஜனவரி 31ம் தேதியே சி.பி.ஐ. அறிவித்தது.
ஆனால் ஜனவரி 6ம் தேதி நீரவ் மனைவி இந்தியாவில் இருந்து சென்றுள்ளார். மேலும் அவரது சகோதரர் நிஷால் மோடி ஜனவரி 1ம் தேதி இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் நீரவ் மோடி தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே இவரது வைர நகை வடிவமைப்பு நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இருந்து வந்தார்.
இதனால் நீரவ் மோடி நிறுவன விளம்பரத்தில் பிரியங்கா சோப்ராவே நடித்து கொடுத்தார். இந்த நடிப்புக்கு சம்பளம் பாக்கி இருப்பதாக தெரிகிறது. இதனால் பிரியங்கா சோப்ரா நீரவ் மோடி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.