5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி...  மீட்பு பணி தீவிரம்...!

 
Published : Feb 15, 2018, 08:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி...  மீட்பு பணி தீவிரம்...!

சுருக்கம்

5th storey collapse crash and 4 killed

பெங்களூரில் 5 மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

பெங்களூர் கசவனஹல்லி பகுதியில், பாதி கட்டுமான முடிவடைந்த நிலையில் இருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று இன்று மாலை 3.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. 

அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இதுகுறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இன்னும் யாரேனும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளார்களா என மீட்பு படையினர் தேடி வருகின்றனர். எதனால் கட்டடம் இடிந்து விழுந்தது என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!