சுயசார்பு இந்தியா வெற்று பார்வை அல்ல; திட்டமிடப்பட்ட உத்தி! இந்தியாவில் முதலீடு செய்வது எளிது.. பிரதமர் மோடி

By karthikeyan VFirst Published Nov 5, 2020, 8:53 PM IST
Highlights

இந்தியாவில் வருமான வரி குறைவு; முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதால் முதலீடு செய்வது எளிது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
 

இந்தியாவில் வருமான வரி குறைவு; முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதால் முதலீடு செய்வது எளிது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்களுடனான வீடியோ கான்ஃபரெசிங்கில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன; விதிகளும் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன.

எனவே இந்தியாவில் முதலீடு செய்வது சிறப்பான தேர்வாக இருக்கும் . இந்தியாவில் முதலீடு செய்வது எளிது. இந்தியாவில் கொரோனா பரவாமலும், பொருளாதாரம் பாதிக்கப்படாமலும் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா தன்னிறைவு பொருளாதார நாடாக மாறுவதற்கான தேடல், ஒரு பார்வை மட்டுமல்ல; நன்கு திட்டமிடப்பட்ட பொருளாதார உத்தி என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சுயசார்பு இந்தியா திட்டம், கொரோனா லாக்டவுனின் போது, இந்தியாவை தன்னிறைவு பெற்ற பொருளாதார நாடாக உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட திட்டம் ஆகும்.

click me!