
வேலை தேடும் நாடாக இல்லாமல் வேலை வழங்கும் நாடாக இந்தியா உருவெடுக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசியான் மாநாடு நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, இந்தியாவில் தொழில்நுட்பம் மூலமாக மக்களை அரசு நெருங்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
வேலை தேடும் நாடாக இல்லாமல் வேலை வழங்கும் நாடாக இந்தியா உருவெடுக்கும் எனவும் இந்தியாவுக்காக வெளிநாடுகளில் இருந்து வரும் நேரடி அந்நிய முதலீடு 67% ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு மானிய உதவி நேரடியாக வாங்கி கணக்கில் செலுத்தப்படுவதாகவும் இந்திய அரசு செயல்படுத்தி வரும் 59 திட்டங்களில் நேரடி மானிய வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நேரடியாக மானியத்தை அளிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.65,000 கோடி வங்கிகள் மூலம் வழங்கப்படுவதாகவும், இந்தியாவை உலகின் தொழில் உற்பத்தி மையமாக மாற்றுவதே தம் இலக்கு என்றும் மோடி பேசினார்.