உஜ்ஜைன் மகாகாளேஸ்வர் கோயில்.. பிரதமர் மோடி அர்பணிக்கிறார் - தமிழகத்தின் விருந்தினர்கள் பட்டியல் வெளியானது

By Raghupati RFirst Published Oct 11, 2022, 4:19 PM IST
Highlights

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மகா காளேஸ்வர் கோயிலின் முதல்பகுதி புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று மாலை அதை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்.

12 ஜோதிர் லிங்களில் உஜ்ஜைன் மகா காளேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மகா காளேஸ்வர் கோயிலுக்கு வருகை தருகிறார்கள். இங்குள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். ஜோதிர்லிங்கங்களிலேயே இதுதான் ஒரே சுயம்புலிங்கம் ஆகும்.

இதையும் படிங்க..ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருஷம் ஆச்சு.. தீபாவளி வாழ்த்து சொல்லவே இல்லை.! திமுகவை வம்புக்கு இழுக்கும் பாஜக

856 கோடியில் மகாகாலேஷ்வர் கோயில் நடைபாதை மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டம் இதுவாகும். இரண்டு பெரிய நுழைவாயில்கள், மார்பிளில் செதுக்கப்பட்ட 108 அலங்கரிக்கப்பட்ட கம்பீரமான தூண்கள், நீர் ஊற்றுகள் மற்றும் சிவபுராணத்தின் கதைகளை சித்தரிக்கும் 50 க்கும் மேற்பட்ட சிலைகள் போன்றவை மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இதையும் படிங்க..வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உஜ்ஜைன் மகா காளேஸ்வர் கோயில் புனரமைப்பு நிறைவு பெற்றுள்ளதால் இன்று மாலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.  இந்நிலையில் இந்த நிகழ்ச்சியினை ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் முன்பாக மக்கள் காணும் வகையில் பெரிய திரையில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

உஜ்ஜைன் மகா காளேஸ்வர் கோவில் நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர் மோடி - தமிழகத்தின் சிறப்பு விருந்தினர்கள் பட்டியல் வெளியீடு. pic.twitter.com/WDKBeuvWym

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

இதையும் படிங்க..சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் திமுக எம்.பி ஆ.ராசா.. சிபிஐ எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் திமுக

click me!