புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

Published : Oct 11, 2022, 04:01 PM IST
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

சுருக்கம்

புதுச்சேரியில் “குரூப் பி, குரூப் சி” பிரிவில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு அம்மாநில அரசு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது.  

மத்தியஅரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு, கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச்  31ம் தேதி பணியில் இருந்தவர்கள் கடந்த நிதி ஆண்டில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தொடர்ந்து பணியில் இருந்தவர்கள் ஆகியோருக்கு இடைக்கால போனஸ் வழங்கப்படும்.  

போனஸ் கணக்கிடுவதற்கான உச்சவரம்பு ரூ.7 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை மாநில அரசில் பணிபுரியும் பிரிவு ' பி ' மற்றும் ' சி ' ஊழியர்களுக்கு போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க நிதித்துறைக்கு உத்தரவிடப்பட்டது. மாநில அரசில் பணிபுரியும் உற்பத்தி சம்மந்தப்பட்ட போனஸ் பெறாத பிரிவு ' பி ' (அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் தவிர்த்து) மற்றும் பிரிவு ' சி ' ஊழியர்கள் , முழுநேர தற்காலிக ஊழியர்கள். போனஸ் வழங்குவதற்கான கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரிவு ' பி ' மற்றும் ' சி ' ஊழியர்களுக்கு போனஸாக ரூ .6,908 மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ . 1,184 ம் வழங்கப்படும் என நிதித்துறை சார்பு செயலர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்
மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!