
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு சற்று முன் தொடங்கியது. டெல்லி நாடாளுமன்ற வளாகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் தலைநகரங்களில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் வாக்களித்து வருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் பாரதீய ஜனதா கூட்டணியின் சார்பில் பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலில் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியிலும், எம்.எல்.ஏ.க்கள் அந்தந்த மாநில சட்டசபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியிலும் ஓட்டுப்போடுகிறார்கள். இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் சற்று முன் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி எம்.பிக்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இதே போன்று அனைத்து மாநில தலைநகரங்களில் உள்ள தலைமைச் செயலகத்தில் வாக்குப் பதிவு நடைப்பெற்று வருகிறது.
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கை முதலாவதாக பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், மத்திய அமைச்சர் பொன்,ராதா கிருஷ்ணன் ஆகியோர் வாக்களித்தனர்.