President Droupadi Murmu: கேரளா, பீகார் உள்பட சில மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கேரளா, பீகார் உள்பட சில மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கான் பீகார் ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் கேரளாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள அரசுடன் பல விவகாரங்களில் முரண்பட்டு வந்த நிலையில், ஆரிஃப் முகமது கான் பீகார் மாநிலத்துக்கு மாறுதலாகியுள்ளார்.
undefined
அடுத்த ஆண்டு பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், அந்த மாநிலத்தின் ஆளுநர் மாற்றப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒடிசா மாநில ஆளுநர் ரகுவர்தாவின் ராஜினாமா கடிதத்தையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டிருக்கிறார். புதிய ஆளுநராக மிசோரம் ஆளுநராக உள்ள ஹரிபாபு கம்பம்பதி நியமிக்கப்பட்டிருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் வி. கே. சிங் மிசோரம் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ளார்.
புத்தாண்டு முதல் பிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு புதிய விதிகள்! ஆர்பிஐ அறிவிப்பு!