
திருப்பதி கோவில் நுழைவாயிலில் உள்ள ஸ்கேனரில் ஏற்பட்ட கோளாறால் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது.
பிரதான நுழைவு வாயிலில் உள்ள ஸ்கேனரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பக்தர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதால், உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டு பின்னர் தரிசனம் செய்வதற்கு அனுப்பப்பட்டுள்ளனர்
மின்கசிவு ஏற்பட்டது என செய்தி பரவியதும், பதற்றத்தில் மக்கள் அலறி அடித்து கொண்டு ஓட தொடங்கியுள்ளனர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பின்னர் சுமார் 15 நிமிடம், மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.தரிசனமும் சில நிமிடம் நிறுத்திவைக்கப் பட்டு,பின்னர் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மின்கசிவு குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதிகபடியான மழையில் ஸ்கேனர் நனைந்ததால் மின்கசிவு ஏற்பட்டு இருக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
இந்த தகவலால் பக்தர்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.