காஷ்மீர் தனி நாடு? பீகாரால் கிளப்பப்பட்டுள்ள புது சர்ச்சை..! இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்த ஒற்றை கேள்வி..!

First Published Oct 11, 2017, 10:33 AM IST
Highlights
kashmir related question in school question paper


பீகாரில் 7-ம் வகுப்பிற்கான கேள்வித்தாளில் காஷ்மீரை தனிநாடு என குறிப்பிட்டிருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பீகாரில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த 5-ம் தேதி தேர்வு நடந்துள்ளது. இதற்காக மத்திய அரசின் சர்வ ஷிக்சா அபியான் திட்டத்தின் கீழும், பீகார் பள்ளி திட்ட கழகத்தின் கண்காணிப்பிலும் செயல்படும் அமைப்பால் வினாதாள்கள் தயார் செய்யப்பட்டு, பீகாரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இதில், 7 ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், கீழ்வரும் 5 நாடுகளில் வசிக்கும் மக்களை எப்படி அழைப்பார்கள் என கேட்கப்பட்டு, சீனா, நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர், இந்தியா என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவின் ஒருபகுதியான காஷ்மீரை தனிநாடு போல குறிப்பிட்டு கேட்கப்பட்ட அந்த கேள்வி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது.

காஷ்மீருக்கு உரிமைகோரும் பாகிஸ்தானிடம், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய காஷ்மீரை தனிநாடாக குறிப்பிட்டு கேட்கப்பட்ட அந்த கேள்வி சர்ச்சையையும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

அந்த கேள்வி தவறாக கேட்கப்பட்டதா? அல்லது வேண்டுமென்றே கேட்கப்பட்டதா? என்ற கேள்விகளும் எழுகின்றன.
 

click me!