சாலையில் பள்ளம் இருக்கா, செல்பி எடுத்து தகவல் கொடுத்தால் ரூ.500 பரிசு

By Selvanayagam PFirst Published Nov 3, 2019, 7:05 AM IST
Highlights

பள்ளம் இல்லாத சாலைகளை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் சமூக வலைதளத்தில் மக்களுக்கு சவால் ஒன்றை மும்பை மாநாகராட்சி விடுத்துள்ளது.
 

அதன்படி சாலையில் பள்ளம் குறித்து தகவல் தெரிவித்து 3 நாட்களில் மூடாவிடாவிட்டால் ரூ.500 பரிசாக வழங்கப்படும்.

மும்பை மாநகராட்சி சார்பில் ட்விட்டரில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “சாலையில் எங்காவது  3 அங்குல ஆழம், ஒரு அடி நீளத்துக்கு மேல் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்து மக்கள் செல்பி எடுத்தோ அல்லது அந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம் குறித்தோ மாநகராட்சி ஆப்ஸில் பதிவிட்டு புகார் அளிக்கலாம்.

 புகார் அளித்தபி்ன் 24 மணிநேரத்துக்குள் அந்த பள்ளம் மூடப்படாமல், சரி செய்யப்படாமல் இருந்தால், புகார் அளித்தவருக்கு நகராட்சி சார்பில் 500 ரூபாய் பரிசு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு “ போத்தோல் சேலஞ்ச் 2019” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சவாலின் காலம் நவம்பர் 1-ம் தேதி முதல் 7-ம் தேதிவரை மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை மாநகராட்சியின் இந்த சவாலை ஏற்று ஏராளமான மக்கள் களத்தில் இறங்கியுள்ளனர். மும்பை நகராட்சியும் சவாலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 
 

click me!