PM Modi: என் மரணத்திற்காக அரசியல் எதிரிகள் காசியில் பிராத்தனை.. பகீர் கிளப்பும் பிரதமர் மோடி.!

Published : Feb 28, 2022, 08:13 AM IST
PM Modi: என் மரணத்திற்காக அரசியல் எதிரிகள் காசியில் பிராத்தனை.. பகீர் கிளப்பும் பிரதமர் மோடி.!

சுருக்கம்

மக்கள் தங்கள் இறுதிக்காலத்தில் வாரணாசிக்கு (காசி) வருவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘நான் இறக்கும் நாள் வரை வாரணாசி மக்களுக்கு சேவை செய்வதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன்’ என்றார்.

முந்தைய ஆட்சியில் புனித யாத்திரை நகரமான வாரணாசி  புறக்கணிக்கப்பட்டது. மாநிலத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். 

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களான நடைபெற்று வகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. மார்ச் 3ம் தேதி 6வது கட்ட வாக்குப்பதிவும், மார்ச் 7ம் தேதி 7வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி வாரணாசி  நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, அவர் பேசுகையில்;- உக்ரைனில் இருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்களை அழைத்து வருகிறோம். எங்கள் மகன்கள் மற்றும் மகள்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதிசெய்ய நாங்கள் இரவும் பகலும் உழைத்து வருகிறோம் என்றார். 

மேலும், மக்கள் தங்கள் இறுதிக்காலத்தில் வாரணாசிக்கு (காசி) வருவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘நான் இறக்கும் நாள் வரை வாரணாசி மக்களுக்கு சேவை செய்வதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன்’ என்றார். எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சிகளை தனிப்பட்ட சொத்தாகக் கருதுகிறார்கள். தொண்டர்களின் கட்சியான பாஜகவுக்கு அவர்களால் ஒருபோதும் சவால் விட முடியாது என்றும் பிரதமர் கூறினார்.

இந்திய அரசியலில் எத்தனை பேர் மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு செல்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், காசியில் என் மரணத்திற்காக சிலர் பிரார்த்தனை செய்ததை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். வாரணாசியோ, இங்குள்ளவர்களோ என்னை விடமாட்டார்கள் என்பதை நான் உணர்ந்தேன். வாரணாசி மக்களுக்கு சேவை செய்துகொண்டிருக்கும்போதே இறப்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை