டேங்கர் லாரிக்குள் வைத்து மாடுகள் கடத்தல்.. 11 மாடுகள் சடலமாக மீட்பு.. இருவர் கைது!

Ansgar R |  
Published : Jul 04, 2023, 05:12 PM IST
டேங்கர் லாரிக்குள் வைத்து மாடுகள் கடத்தல்.. 11 மாடுகள் சடலமாக மீட்பு.. இருவர் கைது!

சுருக்கம்

அந்த டேங்கர் லாரிக்குள் இருந்த நெரிசலான இடத்தில், 25 மாடுகள் பரிதாபகரமான நிலையில், இறந்து கிடந்த 11 கால்நடைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தது.

பணத்திற்காக சில மனிதர்கள் எந்தவிதமான காரியத்தையும் இரக்கமின்றி செய்வார்கள் என்பதை, அனுதினம் நாம் வாசிக்கும் செய்திகளின் மூலம் தெரிந்துகொள்கிறோம். அந்த வகையில் சற்றும் இரக்கமில்லாத ஒரு சம்பவம் இந்தியாவின் முக்கிய நகரகங்களில் ஒன்றான அசாமில் அரங்கேறியுள்ளது.

குவஹாத்தி பகுதி போலீசாருக்கு ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் குறித்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்றை வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படியுங்கள் : மசாஜ் சென்டர் என்ற பெயரில் மஜாவாக நடந்த விபச்சாரம்! 14 பெண்கள்! 32 ஆண்கள்! உல்லாசம்? 

அந்த வண்டியில் இருந்தவர்களை போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பதில் அளித்த நிலையில் போலீசார் வண்டிக்குள் என்ன இருக்கிறது என்று சோதிக்க சென்றுள்ளனர். அப்போது தான் அந்த டேங்கர் லாரிக்குள் 25 மாடுகள் மற்றும் 11 இறந்த கால்நடைகள் இருந்தது தெரியவந்துள்ளது. 

அந்த டேங்கர் லாரிக்குள் இருந்த குறுகிய இடத்தில், 25 மாடுகள் பரிதாபகரமான நிலையில், இறந்து கிடந்த 11 கால்நடைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தது. போலீசார் உடனடியாக அந்த மாடுகளை மீட்டனர். மேலும் உரிமம் இல்லாமல், இரக்கமற்ற முறையில் மாடுகளை கொண்டுசென்ற ஓட்டுநர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் தற்போது விசாரணை நடந்து வருகின்றது, மாடுகளை எங்கிருந்து, எதற்காக, எங்கு கொண்டுசெல்கின்றனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. 

இதையும் படியுங்கள் : ஹோட்டலுக்குள் புகுந்த லாரி! கோர விபத்தில் 15 பேர் பலி!

PREV
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!