
கார் விபத்தில் பிரபல மாடல் அழகி உயிரிழந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த மேற்கு வங்காள நடிகர் விக்ரம் சட்டர்ஜியை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்காளத்தில் பிரபல மாடல் அழகியாகவும், டிவி தொகுப்பாளினியாகவும் வலம் வந்தவர் சோனிகா சவுகான். இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி பிரபல நடிகர் விக்ரம் சட்டர்ஜியுடன் சென்றுள்ளார்.
அங்கு நிகழ்ச்சியை முடித்து கொண்டு 29 ஆம் தேதி அதிகாலை இருவரும் காரில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது, கார் கொல்கத்தா அருகே சென்ற போது நடைபாதையில் ஏறியபோது நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் சோனிகா சவுகானும், விக்ரம் சட்டர்ஜியும் பலத்த காயம் அடைந்தனர்.
பின்னர், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சோனிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் உயிர்தப்பிய நடிகர் விக்ரம் சட்டர்ஜி மீது கொலைக்கு நிகரான வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார்.
இதைதொடர்ந்து போலீசாரால் தேடப்பட்டுவந்த நிலையில் கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காரில் வந்த நடிகர் விக்ரம் சட்டர்ஜியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.