ஒருமித்த உறவில் உள்ள சிறார்களை தண்டிக்க POCSO சட்டம் இயற்றப்படவில்லை.. உயர்நீதிமன்றம் கருத்து.

Published : May 04, 2023, 02:33 PM IST
ஒருமித்த உறவில் உள்ள சிறார்களை தண்டிக்க POCSO சட்டம் இயற்றப்படவில்லை.. உயர்நீதிமன்றம் கருத்து.

சுருக்கம்

ஒருமித்த உறவில் உள்ள சிறார்களை தண்டிக்க POCSO சட்டம் இயற்றப்படவில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம் ஒருமித்த உறவில் உள்ள சிறார்களைத் தண்டிக்கவோ மற்றும் அவர்களை குற்றவாளிகள் என்று முத்திரை குத்துவதற்காக இயற்றப்பட்டது அல்ல என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. மைனர் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் இம்ரான் ஷேக் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் இம்ரான் ஷேக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று இம்ரான் ஷேக் என்பவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்தது. நீதிபதி அனுஜா பிரபுதேசாய் தலைமையிலான ஒற்றை நீதிபதி அமர்வு சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்தது.

இதையும் படிங்க : 50 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இப்போது ஆக்டிவ் இணைய பயனர்களாக உள்ளனர் : அறிக்கை

இந்த வழக்கு ஏப்ரல் 26-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, நீதிபதி, தான் கடத்தப்படவில்லை என்றும், 2020 டிசம்பரில் தனது வீட்டை விட்டு தனியாக சென்றுவிட்டதாகவும் சிறுமி காவல்துறையில் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர் மைனர் என்பது உண்மைதான் என்று தெரிவித்த நீதிபதி, ஆனால் முதல்கட்ட விசாரணையில், சிறுமியின் சம்மதத்துடன் உடலுறவு நடந்தது தெரியவந்துள்ளது என்று கூறினார்.

மேலும் "பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க POCSO சட்டம் இயற்றப்பட்டுள்ளது, மேலும் குழந்தைகளின் நலன் மற்றும் நலனைப் பாதுகாப்பதற்காக கடுமையான தண்டனை விதிகள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். காதல் அல்லது ஒருமித்த உறவில் உள்ள சிறார்களைத் தண்டிப்பது மற்றும் அவர்களை குற்றவாளிகள் என்று முத்திரை குத்துவது ஆகியவை நிச்சயமாக போக்சோ சட்டத்தின் நோக்கம் அல்ல" என்று தெரிவித்தார்.

"விசாரணை இன்னும் தொடங்கவில்லை, விரைவில் வழக்கு விசாரணை தொடங்க வாய்ப்பில்லை. விண்ணப்பதாரரை மேலும் காவலில் வைப்பது, கடின குற்றவாளிகளுடன் தொடர்பு கொள்ள வைக்கும், இது அவரது நலனுக்கும் தீங்கு விளைவிக்கும்" என்று கூறிய நீதிபதி அந்த நபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : #Breaking : தானியங்கி இயந்திரங்கள் மூலம் மது விற்க தடை கோரிய வழக்கு.. உயர்நீதிமன்றம் தள்ளுபடி

PREV
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!