போரினால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் உயர்மட்டக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
சூடான் நாட்டில் ராணுவத்தின் இரண்டு பிரிவினருக்கும் இடையே பெரிய அளவில் போர் நடந்து வருகிறது. அங்கு 4000த்துக்கும் அதிகமான இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களை மீட்பது தொடர்பாக இன்று அவசர கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி இருக்கிறார்.
சூடானில் நிலைமை மிகவும் பதற்றமாக இருப்பதாகவும், இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதாகவும் தெரிவித்து இருந்தது. இந்தியர்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தது.
இதுவரைக்கும் ராணுவத்தின் இரண்டு தரப்பிலும் நடந்த மோதலில் 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சூடான் நாட்டின் ராணுவம் மற்றும் விரைவு ஆதரவு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ரமலான் என்பதால் இன்றும், நாளையும் போர் நிறுத்தம் செய்துள்ளனர்.
சூடான் தலைநகர் கார்டோம் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை அதிகமான நகரம். மேலும் பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இங்கு வான்வழித் தாக்குதல்கள் மற்றும் டாங்குகள் மூலம் துப்பாக்கிச் சூடு போன்ற கடுமையான போர் நடந்து வந்தது. ஐந்து மில்லியன் மக்களில் பெரும்பாலானவர்கள் மின்சாரம், உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் கடுமையான வெப்பத்தில் வீட்டில் தங்கியுள்ளனர். தகவல் தொடர்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. இஉண்ண உணவு இல்லை.
சூடானில் குடிக்க தண்ணீர் இல்லாமல் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள்: போர் நிறுத்தம் இதற்குத்தானா?