Surya Ghar Muft Bijli Yojana : பிரதமரின் Surya Ghar Muft Bijlee Yojana என்பது இந்தியாவில் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மத்திய அரசின் திட்டமாகும்.
சூரிய ஒளியால் சக்திபெற கூடிய மேற்கூரைகளை தங்கள் வீடுகளில் பொறுத்த விரும்புபவர்களுக்கு. ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 75,021 கோடி செலவில் கடந்த பிப்ரவரி 29 204 அன்று மத்திய அமைச்சரவை இந்த புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது?
இந்த முன்முயற்சியானது 2 கிலோவாட் திறன் வரையிலான அமைப்புகளுக்கு சோலார் யூனிட் செலவில் 60% மானியமாகவும், 2 முதல் 3 கிலோவாட் திறன் கொண்ட அமைப்புகளுக்கு கூடுதல் சிஸ்டம் செலவில் 40% மானியமாகவும் வழங்குகிறது. மானியம் அதிகபட்சமாக 3 கிலோவாட் திறன்களுக்கு மட்டுமே. தற்போதைய தரநிலை விலையில், இது 1 கிலோவாட் சிஸ்டத்திற்கு ரூ.30,000 மானியமாகவும், 2 கிலோவாட் சிஸ்டத்திற்கு ரூ.60,000 ஆகவும், 3 கிலோவாட் அல்லது அதற்கு மேற்பட்ட சிஸ்டத்திற்கு ரூ.78,000 ஆகவும் உள்ளது.
CAA Explained: குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கு பயன்படும்? சாதக பாதங்கள் என்னென்ன?
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க யார் தகுதியானவர்கள்?
முதலில் விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
இரண்டாவதாக சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு ஏற்ற கூரையுடன் கூடிய வீடு சொந்தமாக இருக்க வேண்டும்.
மூன்றாவதாக வீட்டில் சரியான மின் இணைப்பு இருக்க வேண்டும்.
நான்காவதாக சோலார் பேனல்களுக்கு குடும்பம் வேறு எந்த மானியத்தையும் பெற்றிருக்கக் கூடாது.
மானியம் பெறுவதற்கான நடைமுறை என்ன?
முதலில் இதற்குரிய போர்ட்டலில் பதிவு செய்யவும்
உங்கள் மாநில மற்றும் மின்சார விநியோக நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும்
உங்கள் மின்சார நுகர்வோர் எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலை உள்ளிடவும்.
நுகர்வோர் எண் மற்றும் மொபைல் எண்ணுடன் உள்நுழைந்து படிவத்தின்படி மேற்கூரை சோலருக்கு விண்ணப்பிக்கவும்.
நிறுவல் முடிந்ததும், ஆலை விவரங்களைச் சமர்ப்பித்து, நெட் மீட்டருக்கு விண்ணப்பிக்கவும். நெட் மீட்டர் மற்றும் டிஸ்காம் மூலம் ஆய்வு செய்த பிறகு, போர்ட்டலில் இருந்து கமிஷன் சான்றிதழ் தரப்படும்.
கமிஷன் ரிப்போர்ட் கிடைத்தவுடன். வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலையை போர்டல் மூலம் சமர்ப்பிக்கவும். 30 நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் உங்கள் மானியத்தைப் பெறுவீர்கள்.
கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது!