ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தை டிச 7ம் தேதி தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

By karthikeyan VFirst Published Dec 5, 2020, 6:40 PM IST
Highlights

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தை வரும் 7ம் தேதி காலை 11.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். 

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தை வரும் 7ம் தேதி காலை 11.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். அந்த தொடக்க விழாவில் மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, உத்தர பிரதேச மாநில முத்லவர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டம், 29.4 கிமீ தொலைவிற்கான 2 வழித்தடங்களை கொண்டது. சுற்றுலாத்தலமான தாஜ்மஹால், ஆக்ரோ கோட்டை, ஸ்ரீகந்த்ரா ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களை இணைக்கும் திட்டம். ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் 26 லட்சம் பேர் பயனடைவார்கள்.

ஐந்து ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.8,379.62 ஆகும். ஒவ்வொரு ஆண்டு ஆக்ராவிற்கு 60 லட்சம் பேர் சுற்றுலா செல்கின்றனர். மாஸ் ரேபிட் டிரான்ஸிட் சிஸ்டம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. 
 

click me!