வேளாண் பாதுகாப்பு சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வெற்று அரசியல்..! கட்டுக்கதைகள் vs உண்மை

By karthikeyan VFirst Published Dec 3, 2020, 12:35 PM IST
Highlights

வேளாண் பாதுகாப்பு சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும் நிலையில், அந்த சட்டங்களுக்கு எதிராக கிளப்பிவிடப்படும் கட்டுக்கதைகள் vs உண்மை குறித்த விரிவான விளக்கத்தை பார்ப்போம்.
 

வேளாண் பாதுகாப்பு சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும் நிலையில், அந்த சட்டங்களுக்கு எதிராக கிளப்பிவிடப்படும் கட்டுக்கதைகள் vs உண்மை குறித்த விரிவான விளக்கத்தை பார்ப்போம்.

கட்டுக்கதை: குறைந்தபட்ச ஆதாய விலை இந்த சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
   
உண்மை என்னவென்றால் குறைந்தபட்ச ஆதாய விலை(MSP) குறிப்பிடப்பட்டிருக்கிறது.
        
              * விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 சட்டத்தில் பாயிண்ட் 5ல், உத்தரவாத விலை, பொருத்தமான பென்ச் மார்க் விலை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவை, குறைந்தபட்ச ஆதாய விலையான MSPயைத் தான் குறிக்கின்றன.

கொள்முதல் செய்யப்படும் விவசாய விளைபொருட்களுக்கான விலை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும். அந்த விலை வேறுபடுமானால், அந்த ஒப்பந்தத்தில் இருக்கும் கீழ்வரும் 2 பாயிண்ட்கள், உத்தரவாத விலையை வழங்குவதை வெளிப்படையாக உறுதி செய்கின்றன.
 
   a) விவசாய விளைபொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலை உறுதியாக வழங்கப்பட வேண்டும்.

   b) விவசாயிகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக  உத்தரவாத விலையைவிட, போனஸ் அல்லது பிரீமியம் ஆகிய வழிகளில் கொடுக்கப்படும் கூடுதல் விலை குறித்த விவரங்கள் APMC யார்டில் தெளிவாக இருக்கும்.

கட்டுக்கதை: கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை பிடுங்கிவிடும்.

உண்மை: விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020ல் பாயிண்ட் 8ன் படி, விவசாயிகளின் விளைநிலங்கள் பாதுகாப்படுகின்றன என்பதால், விளைநிலங்களை கார்ப்பரேட் கைப்பற்றுவது என்பது நடக்காத காரியம்.

பஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் உண்மை என்னவென்பதை பாருங்கள்.

2019-2020ம் ஆண்டில் இந்தியாவில் உணவு தானிய உற்பத்தியில் டாப் ஐந்து மாநிலங்கள்(ஆர்பிஐ புள்ளிவிவர தகவல்)

1. உத்தர பிரதேசம்   : 55 லட்சம் டன்
2. மத்திய பிரதேசம் : 33 லட்சம் டன்
3. பஞ்சாப்                     :  30 லட்சம் டன்
4. ராஜஸ்தான்             : 23 லட்சம் டன்
5. ஹரியானா              :  18 லட்சம் டன்

பஞ்சாப்பை விட அதிகளவிலான உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் செய்யப்படவில்லை.

பஞ்சாப்பில் விவசாய விளைபொருட்கள் மற்றும் அவை சார்ந்த இண்டஸ்ட்ரீஸின் மூலம் ஈட்டப்படும் லாப அளவு

பஞ்சாப்:  ரூ. 0.9 லட்சம் கோடி

பஞ்சாப்பைவிட குறைந்த உற்பத்தி செய்து, ஆனால் அதிக லாபம் ஈட்டும் மாநிலங்கள்

மகாராஷ்டிரா    : ரூ. 1.9 லட்சம் கோடி
ஆந்திரா               : ரூ. 1.8 லட்சம் கோடி
மேற்கு வங்கம் : ரூ. 1.4 லட்சம் கோடி
தமிழ்நாடு           : ரூ. 1.2 லட்சம் கோடி

பஞ்சாப்பில் உற்பத்தி செய்யப்படும் உணவு தானிய அளவில் 3ல் ஒரு பங்கு மட்டுமே உற்பத்தி செய்யும் தமிழ்நாடு, அதிக லாபம் ஈட்டுகிறது. அப்படியென்றால், பஞ்சாப் ஈட்ட வேண்டிய லாபத்தை திண்பது யார்..?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, விவசாயிகளுக்கு வழங்கிய குறைந்தபட்ச ஆதாய விலையை விட, அதிக விலையை பெற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழிவகை செய்து உதவியிருக்கிறது. 

UPA 2(ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2: 2009-2014) vs NDA (தேசிய ஜனநாயக கூட்டணி) ஆட்சிகளில் அரிசி மற்றும் கோதுமைக்கு குவிண்டாலுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதாய விலையின் ஒப்பீட்டை பார்ப்போம். 

அரிசிக்கு குவிண்டாலுக்கான விலை:

2009-2010  :  ரூ. 950
2013-2014  : ரூ. 1310
2020-2021  :  ரூ. 1868

கோதுமைக்கு குவிண்டாலுக்கான விலை:

2009-2010  :  ரூ. 1080
2013-2014  : ரூ. 1350
2020-2021  : ரூ. 1925

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, விவசாயிகளிடமிருந்து அதிகபட்சமான விளைபொருட்களை கொள்முதல் செய்திருக்கிறது.
     

       *ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி 2(2009-2014)ல் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டதைவிட 200 சதவிகிதம் அதிகமாக மோடி அரசு கொள்முதல் செய்திருக்கிறது.
       * 2014லிருந்து 2019 வரையிலான பிரதமர் மோடி ஆட்சியில் ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான கோதுமை கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.


         * UPA 2 ஆட்சியை விட 250% அதிகமான அளவு அரிசியை மோடி அரசு நேரடியாக கொள்முதல் செய்திருக்கிறது.
         * மோடி அரசு, ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான அரிசியை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திருக்கிறது. இது காங்கிரஸ் ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதை விட இரண்டரை மடங்கு அதிகம்.


         * UPA 2 ஆட்சியை விட மோடி ஆட்சியில், பருப்புவகைகள் கொள்முதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
         * மோடி அரசு ரூ.50,000 கோடி மதிப்பிலான பருப்புவகைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது UPA 2(2009-2014) ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட தொகையை விட 7592 மடங்கு அதிகமாகும்.

நுகர்வோர் விலை குறியீடு(Consumer Price Index) என்பது பொருட்கள் மற்றும் சேவைகள் அடங்கிய கூடையின் சராசரி விலையை போக்குவரத்து, உணவு, மருத்துவ வசதி ஆகியவற்றை உள்ளடக்கி மதிப்பிடுவதாகும். ஒவ்வொரு முறையும் விலையில் ஏற்படும் மாற்றத்தின் சராசரியின் அடிப்படையில் கணக்கிடுவதாகும்.

2008 - 09 : 450
2013 - 14 : 750
2019 - 20 : 980

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 11%ஆக இருந்த நுகர்வோர் விலை குறியீடு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 5.5%ஆக உள்ளது. விவசாயிகளின் செலவு உயர்வு, பாஜக ஆட்சியில் பாதியாக குறைந்துள்ளது.

பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு அதிகமான லாபமும் வருவாயும் கிடைக்க வழிவகை செய்தும் கூட, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுவது ஏன்..?

பஞ்சாப்பில் மட்டுமே போராட்டங்கள் நடத்தப்படுவதற்கான காரணங்கள்:

* இடைத்தரகர்கள் கலையெடுக்கப்பட்டதால், அவர்களுக்கான வருவாய் பாதிக்கப்பட்டது.
* 1800 மண்டி வரி வருவாய் இழப்பு மாநில அரசுக்கு ஏற்படுகிறது.
* அகாலி தளம் இரண்டாக உடைந்த நிலையில், அந்த கிளர்ச்சியை எதிர்கொள்ள இந்த போராட்டங்களை பயன்படுத்திக்கொள்கின்றன.
* காங்கிரஸ் ஆளும் மிகக்குறைந்த மாநிலங்களில் பஞ்சாப்பும் ஒன்று.

இவைதான் வேளான் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப்பி போராட்டங்க நடத்தப்படுவதற்கு காரணம்.

இடைத்தரகர்கள் இதுபோன்ற போராட்டங்களை தூண்டிவிடுகின்றனர். இடைத்தரகர்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 2.5 சதவிகிதம் கமிசன் வழங்கப்படுகிறது. அரிசி மற்றும் கோதுமை கொள்முதலில் மட்டுமே இடைத்தரகர்கள் ரூ.3330 கோடி வருவாய் ஈட்டுகின்றனர். யூனியன்களெல்லாம் வலுவாக இருப்பதால், விவசாயிகளால் அவர்களை மீறி எதுவும் செய்யமுடியவில்லை. விவசாயிகளுக்கு 30 சதவிகித MSP மட்டுமே இடைத்தரகர்களால் வழங்கப்படுகிறது. எனவே பஞ்சாப்பில் இடைத்தரகர்களாக இருப்பது இரட்டை லாபம்.

வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வருவாயும் லாபமும் குறையுமா என்றால் கண்டிப்பாக இல்லை.

வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதற்கு முன்புவரை பஞ்சாப் விவசாயிகள் இடைத்தரகர்களால் ஏராளமான வலியை அனுபவித்திருக்கின்றனர்.

பிரதமர் மோடி விவசாயத்தை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கிறார் என்பது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு
* உணவு தானியங்களை சேமித்து வைக்க போதுமான மண்டிகள் இல்லாததால், 92000 கோடி உணவு பொருட்கள் வீணானது என்பது, முதல் முறையாக 2012ல் செய்யப்பட்ட தணிக்கையில் கண்டறியப்பட்டது.
* அதே காலக்கட்டத்தில் தான் இந்தியாவில் சில்லறை வியாபாரம் விரிவாக்கம் செய்யப்பட்டதுடன், அவர்கள் இரண்டாம் நிலை சேமிப்பு நிலையத்தை பயன்படுத்தினர். 2012ல் ஆட்சியில் இருந்தது காங்கிரஸா அல்லது பாஜகவா?

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் வெற்று அரசியல்

* காண்ட்ராக்ட் விவசாயம் தவறு என்றால், பிறகு, ஹரியானா மற்றும் பஞ்சாப்பில் எப்படி விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டுகின்றனர்?

* விவசாயிகள் இப்போது தங்களது விளைபொருட்களை மண்டிகளிலோ அல்லது மண்டிகளுக்கு வெளியே வேறு எங்கு வேண்டுமானாலுமோ விற்பனை செய்ய முடியும்.

* பஞ்சாப்பை தவிர இந்தியாவின் வேறு மாநில விவசாயிகள் ஏன் இந்த சட்டங்களை எதிர்க்கவில்லை? சொல்லப்போனால், தமிழ்நாடு, மேற்குவங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநில விவசாயிகள், வேளாண் சட்டங்களை வரவேற்கின்றனர்.
 

click me!