புதிய சகாப்தத்தின் உலக அரசியலில் இந்தியாவின் இடத்தை வரையறுத்த ஒரு அரசியல்வாதியாக பிரதமர் நரேந்திர மோடி மாறியுள்ளார். பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளில், பேராசிரியர் எஸ் பலராம கைமல், அவரது ஆளுமை மற்றும் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கும் விதமாக விவரித்துள்ளார்.
இன்று விஸ்வகர்மா ஜெயந்தி. சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு வரும் கன்யா சங்கராந்தி தினத்தன்று விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மலையாள சகாப்தத்தின் கன்னி மாதத்தின் முதல் நாளான செப்டம்பர் 17ஆம் தேதியான அன்று, பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்தநாள் வருகிறது.
பிரதமர் மோடியின் ஆணை, இந்தியாவின் ஆயிரமாண்டு பாரம்பரியத்தை நவீன கால சக்தியாக மீண்டும் கட்டியெழுப்புவதும், சக்திவாய்ந்த, வீரியம் மற்றும் நோக்கமுள்ள புதிய இந்தியாவை உருவாக்குவதும் ஆகும். தேவர்களின் அதாவது கடவுளின் பூமியான இந்தியாவை மீண்டும் கட்டியெழுப்புவதை தனது வாழ்நாள் சபதமாகக் கொண்ட ஒரு முன்னோடி, 'தேவலோகங்களை' (கடவுளின் இருப்பிடம்) உருவாக்கிய விஸ்வகர்மாவின் பிறந்தநாளில் பிறந்துள்ளார் மோடி.
மோடி எப்போதாவது இந்தியாவின் பிரதமராக வருவதை இலக்காகக் கொண்டாரா ? இல்லை என்று பள்ளி மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார். ஆனால், அவருக்கு அந்த லட்சியம் இருந்ததாக நான் நம்ப விரும்புகிறேன். ஏனென்றால், வேறொன்றுமில்லை, ஒரு இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கி படிப்படியாக நகர்ந்து, அதை அடையும் பார்வை எந்த மனிதனுக்கும் ஒரு முன்மாதிரி ஆகும்.
இலக்கை நிர்ணயித்து அதை அடைவதற்கான பயிற்சிதான் நமது இளைஞர்களிடம் இல்லாதது, நமது நாட்டின் வளர்ச்சியின்மைக்கு உண்மையான காரணம் ஆகும். திட்டமிடல் என்பது நமது பள்ளி பாடத்திட்டத்தில் கற்பிக்கும் தலைப்பு அல்ல என்பதே உண்மை. அமெரிக்க நாட்டின் வெற்றி என்னவென்றால், அவர்களின் ஆரம்பப் பள்ளிகளில் திட்டமிடல் சரியாக உள்ளது.
ஒரு முழு கட்டிடத்துடன் ஒரு செங்கல் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா ? சமஸ்கிருதத்தில், 'இஷ்டி' மற்றும் 'சமஷ்டி' என்று அழைக்கப்படுகிறது. 'இஷ்டி' என்றால் செங்கல், 'சமஷ்டி' கட்டுவது. கட்டிடம் ஒரே அமைப்பாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான செங்கற்களால் ஆனது. செங்கற்களைப் பயன்படுத்தி ஒரு நல்ல கட்டிடத்தை உருவாக்கும்போது, இரண்டு விஷயங்கள் முக்கியமாக தேவைப்படுகிறது.
முதலில், அந்த செங்கற்களை சரியாக அடுக்கி வரிசையாக்க வேண்டும். இரண்டாவதாக, ஒவ்வொரு செங்கலும் அதன் நிலைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், குறைபாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும். சமுதாயக் கட்டுமானமும், தேசத்தைக் கட்டியெழுப்புவதும் இப்படித்தான். அந்தந்த இடத்தில் செங்கற்களை வைப்பது போல் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் திறமைக்கேற்ப உரிய இடத்தில் வைக்கும் வகையில் சமுதாயமும் நாடும் கட்டமைக்கப்படும்.
தேசத்தின் கட்டுமானப் பொருளாக இருக்கும் ஒவ்வொரு குடிமகனும், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தானே தயாராக வேண்டும். சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் சமுதாயக் கட்டுமானத்திற்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம் ஆகும். கல்வி பெறுவது அதன் ஒரு பகுதியாகும். அதனுடன், இலக்கை மனதில் நிர்ணயித்து, அதை அடைய அயராது உழைப்பதும் முக்கியம் ஆகும்.
தேசத்தின் உடலில் செங்கல்லாக இருக்கும், ஒவ்வொரு குடிமகனும் தன் நோக்கம் என்ன என்பதை உணர்ந்து அதற்குத் தயாராக வேண்டும். பிரதமர் மோடி உருவான காலகட்டம், சிறந்த செங்கலாக மாறுவதற்குத் தன்னைத் தயார்படுத்துவதைத் தவிர வேறில்லை. ஒரு அரசியல்வாதியாக, அரசியல் சாசன பதவிகளில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட நபராக, நமது இந்திய பிரதமர் மோடி அதைச் செய்துள்ளார். இது சும்மா ஒன்றும் சொல்லவில்லை. மோடியின் சமூக வாழ்க்கை எட்டு வயதில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் குழந்தை தன்னார்வலராகத் தொடங்கியது.
அவர் 1971 இல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் முதலில் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். பின்னர் பங்களாதேஷின் விடுதலையைக் கோரி ஜனசங்கத்தின் ஒரு பகுதியாக இணைத்துக்கொண்டார். இந்த போராட்டத்தின் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இப்படித்தான் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து, 1975ல், எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது.
அவர் அவசரநிலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றார். 1980ல் ஜனசங்கம் பாஜக ஆனது. 1975 மற்றும் 2000 க்கு இடையில், நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பயணம் செய்தார். அப்போதுதான் அவருக்கு கேரளாவின் கிராமங்கள் உட்பட பெரும்பாலான இடங்கள் அறிமுகமாகின. இந்த அனுபவ வெளிச்சத்தின் மூலம், பாஜகவின் புகழையும் அரசியல் பலத்தையும் பெரிதும் அதிகரித்த இரண்டு பெரிய அரசியல் இயக்கங்களை ஒழுங்கமைப்பதில் அவர் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளலாம்.
ஒன்று அயோத்தி போராட்டத்தின் போது லால் கிருஷ்ண அத்வானியின் ரத யாத்திரை, மற்றொன்று முரளி மனோகர் ஜோஷியின் ஏக்தா யாத்திரை. மக்களை நெருக்கமாக அறிந்த அனுபவச் செல்வத்திலிருந்து, சாதாரண வாக்காளர்களின் மனநிலையை மட்டுமல்ல, இந்திய இளைஞர்களின் எண்ணங்களையும் அவர் புரிந்து கொண்டுள்ளார்.
இளைஞர்களை அரவணைக்காத ஒருவர் எப்படி இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியின் அரசியல் முன்னோடியாக இருக்க முடியும் ? மளிகைக் கடைக்காரர் குடும்பத்தில் தேநீர் வியாபாரம் செய்து வந்த மூல்சந்த் மோடிக்கும், ஹீராபென் என்பவருக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை நரேந்திர மோடி. மோடியும் சிறுவயதில் தனது சகோதரருடன் சேர்ந்து தேநீர் வியாபாரம் செய்தார்.
மோடி எந்த அரசியல் பாரம்பரியத்தையும் கோராத பின்னணியில் பிறந்தார் என்பதை நினைவில் கொள்வது அவசியம். அவருடைய குடும்பத்திலோ அல்லது உறவினர்களிலோ அரசியலில் கால் பதித்தவர்கள் யாரும் இல்லை. அவர் இப்போது இந்தியாவின் பிரதமர் மட்டுமல்ல, தற்போதைய இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான அரசியல் தலைவராகவும் உள்ளார். அதையும் தாண்டி, இப்போது உலகின் மிக உயர்ந்த நட்சத்திர அந்தஸ்துள்ள தலைவரும் ஆவார்.
தேசியத் தலைவராக மோடியின் நிலை உலக மதிப்பீடுகளிலும் முதலிடத்தில் உள்ளது. ரஷ்யாவையும், அமெரிக்காவையும் சமாதானம் செய்யும் அளவுக்கு அரசியல் தலைவர். புதிய உலக அரசியலில் இந்தியாவின் இடத்தை வரையறுத்த அரசியல்வாதியாக அவர் மாறியுள்ளார். இதுவொரு சகாப்தம் தான். குஜராத்தைச் சேர்ந்த வெறும் டீ விற்பவரின் மகனின் சாதனைகள் தான் இவை. ஒரு காலத்தில் டீக்கடைப் பையன், இப்போது இந்தியாவை உலக வல்லரசாக மாற்ற வேண்டும் என்று கனவு காண்கிறான்.
அவர் இந்தியாவை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது பற்றி பேசுகிறார். அதற்காக பாடுபடுகிறார். உலகமே இந்தியாவை மையமாகக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். 'மேக் இன் இந்தியா' பற்றி மட்டும் பேசாமல், 'மேக்கிங் ஃபார் தி வேர்ல்ட்' பற்றியும் பேசுகிறார். அவர் இப்போது இருக்கும் இடம் அவர் நோக்கத்தின் உச்சம் அல்ல, ஆனால் இலக்கை நோக்கிய பாதையில் ஒரு புள்ளி மட்டுமே. இன்று, அன்றாடம், நேற்று அவர் நிர்ணயித்த இலக்குகளை ஒவ்வொன்றாக செயல்படுத்துவதைப் பார்க்கிறோம்.
இப்படிப்பட்ட வாழ்க்கை யாருக்கு மாதிரியாக இருக்கக்கூடாது ? நமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சொன்னதை மறந்து விட்டோமா ? நாம் கனவு கண்டு அவற்றை நனவாக்க வேண்டுமா ? இல்லை என்றால், யோசனைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சிறந்த உதாரணமாக நாம் பார்க்க வேண்டிய நபர் நரேந்திர மோடி இல்லையா ? சுருக்கமாக, உலக அரசியலில் இந்தியாவுக்கு மோடி ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் நிலையை, இதைச் சொல்ல விரும்புகிறேன்.
(இந்த கட்டுரையின் ஆசிரியர் சென்னையில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உயிர் வேதியியல் துறையில் பேராசிரியராக உள்ளார். இவை அனைத்தும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும்.)
மேலும் செய்திகளுக்கு..“டீக்கடைக்காரர் முதல் இந்திய பிரதமர் வரை” - பிரதமர் மோடியை பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்.!