காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது எப்படி..? பிரதமர் மோடி கூறிய முக்கியமான அறிவுரை

By karthikeyan VFirst Published Mar 5, 2021, 9:19 PM IST
Highlights

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செய்ய வேண்டிய விஷயம் என்னவென்று பிரதமர் நரேந்திர மோடி செராவீக் சர்வதேச எரிசக்தி மாநாட்டில் தெரிவித்தார்.
 

செராவீக் வருடாந்திர சர்வதேச எரிசக்தி மாநாடு மார்ச் 1 முதல் 5(வெள்ளிக்கிழமை) வரை நடந்தது. இந்த மாநாட்டின் கடைசி தினமான இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் லீடர்ஷிப்(தலைமைத்துவ) விருது வழங்கப்பட்டது.

விருது வாங்கிய பிரதமர் மோடி பேசுகையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படும் பண்பாட்டை கொண்ட நம் இந்திய மண்ணிற்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். செராவீக் உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் லீடர்ஷிப் விருதை மிகுந்த பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்திய மண்ணில் மக்களுக்கு இந்த விருதை காணிக்கையாக்குகிறேன்.

மிகச்சிறந்த சுற்றுச்சூழல் சாம்பியன்களில் ஒருவராக வாழ்ந்தவர் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தி காட்டிய பாதையில் மனிதகுலம் சரியாக சென்றிருந்தால், நாம் இன்று சந்திக்கும் நிறைய பிரச்னைகளை சந்தித்திருக்கவே மாட்டோம். நம் செயல்பாட்டை மாற்றிக்கொள்வது மட்டுமே காலநிலை மாற்றத்திற்கு எதிராக நாம் போடும் சக்திவாய்ந்த சண்டையாக இருக்கும்.

இன்றைய உலகம் ஃபிட்னெஸ் மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. ஆரோக்கியமான இயற்கை உணவுகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது. உலகையே ஆயுர்வேதத்தை நோக்கி நகர்த்த இந்தியாவால் முடியும். இந்தியாவின் காட்டுப்பகுதி கடந்த 7 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. சிங்கம், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இவையனைத்தும் மக்களின் செயல்பாடு மாற்றத்திற்கான சிறந்த அறிகுறிகள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
 

click me!