மீண்டும் புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி... மாநில பாஜக தலைவரின் அதிரடி அறிவிப்பால் தொண்டர்கள் உற்சாகம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 10, 2021, 1:25 PM IST
Highlights

பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு புதுச்சேரியில் பாஜகவின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் மூலமாக தெரியவந்தது. 

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி புதுச்சேரி வந்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவர், அங்கிருந்து தனி விமானத்தில் புதுச்சேரிக்கு வந்தார். தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அவர், ரூ.3,100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு டிஜிட்டல் திரை மூலம் அடிக்கல் நாட்டி, திறந்து வைத்தார். 

2,426 கோடி மதிப்பிலான சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் இடையிலான என்எச் 45-ஏ தேசிய நெடுஞ்சாலை பணி, காரைக்கால் புதிய ஜிப்மர் வளாகத்தில் ரூ.491 கோடி மதிப்பில் கட்டப்படும் புதிய கட்டிடங்கள், சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் புதுச்சேரியில் சிறிய துறைமுகம் அமைத்தல்,  புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டுத் திடலில் பழைய ஓட்டப்பந்தய ஓடுதளத்தை மாற்றி ரூ.7 கோடியில் 400 மீட்டரில் செயற்கை ஓடுதளம் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி,  ஜிப்மரில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக்கூடம் மற்றும் பயிற்சி மையத்துடன் கூடிய ரத்த மையம், புதுச்சேரி கடற்கரை சாலையில் ரூ.14.83 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேரி கட்டிடம், லாஸ்பேட்டையில் ரூ.11.85 கோடியில் கட்டப்பட்டுள்ள 100 படுக்கைகளுடன் கூடிய மகளிர் விடுதி ஆகியவற்றை திறந்து வைத்தார். 


 
பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு புதுச்சேரியில் பாஜகவின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் மூலமாக தெரியவந்தது. சமீபத்தில் வெளியான பெங்களூரு நிறுவனம் ஒன்றின் கருத்துக்கணிப்பின் படி பாஜக - அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டால் 28 தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறப்பட்டது. தற்போது புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இழுபறியில் இருந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது உறுதியாகியுள்ளது. 

click me!