பிரதமர் பதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பயங்கவாதிகளை ஒரு கை பார்க்கப் போகிறேன் - மோடி ஆவேசம்!

By Asianet TamilFirst Published Apr 21, 2019, 3:42 PM IST
Highlights

குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளும் பாஜகவுக்கு கிடைக்காமல் போனால் என்ன ஆகும்? இது ஏன் நடந்தது என்று தொலைக்காட்சிகளில் மே மாதம் 23-ம் தேதி தேர்தல் விவாத மேடை நடத்தப்படும். 

பிரதமர் நாற்காலி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பயங்கரவாதிகளை ஒரு கை பார்க்கப் போய்விவேன் என்று குஜராத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாகப் பேசினார்.
 நாடாளுமன்றத் தேர்தலில் 2 கட்டங்களில் தேர்தல் முடிந்துள்ளன. 3-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. 3-வது கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் போடி பங்கேற்றுள்ளார்.

 
பாட்டன் என்ற நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார். அப்போது தன்னால் பிரதமராக முடியாவிட்டால் பயங்கரவாதிகளை அழிக்கப் புறப்பட்டுவிடுவேன் என்று பேசினார். “நான் குஜராத்தின்  மண்ணின் மைந்தன். இங்கே உள்ள 26 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜகவை வெற்றிபெற வைக்க வேண்டிய கடமை மாநில மக்களுக்கு உள்ளது. மீண்டும் பாஜகவுக்கு வாக்களித்தால் மீண்டும் என்னுடைய ஆட்சி அமையும்.

 
குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளும் பாஜகவுக்கு கிடைக்காமல் போனால் என்ன ஆகும்? இது ஏன் நடந்தது என்று தொலைக்காட்சிகளில் மே மாதம் 23-ம் தேதி தேர்தல் விவாத மேடை நடத்தப்படும். மோடி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று எனக்கு தெரியவில்லை என்று சரத் பவார் சொல்கிறார். 
சரத்பவாருக்கே இது தெரியவில்லை என்றால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எங்கிருந்து தெரிந்துக்கொள்ளப் போகிறார்? பிரதமர் நாற்காலி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்  நானா, பயங்கரவாதிகளா? யார் உயிர் வாழ்வது என்று ஒருகை பார்க்கப் போய்விடுவேன்” என  மோடி ஆவேசமாகப் பேசினார். 

click me!