ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய வீரர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி!

Published : Oct 09, 2023, 02:12 PM ISTUpdated : Oct 09, 2023, 02:16 PM IST
ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய வீரர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி!

சுருக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய விளையாட்டு வீரர்களின் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார்

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.  ஆசிய விளையாட்டு போட்டியில், 28 தங்கம் உள்பட 107 பதக்கங்களை இந்திய அணி வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்தியா 107 பதக்கங்களை வென்றது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்பு, 70 பதக்கங்கள் வென்றதே சிறந்த சாதனையாக இருந்தது.

வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய விளையாட்டு வீரர்களின் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் அக்டோபர் 10 ஆம் தேதி மாலை சுமார் 4:30 மணிக்கு டெல்லியில்  உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிஐ இணைப்பு: மத்திய அரசு கூற்றுக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் சாதித்த விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காகவும், எதிர்காலப் போட்டிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இட்னஹ் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்தியக் குழுவின் விளையாட்டு வீரர்கள், அவர்களின் பயிற்சியாளர்கள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகள், தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் விவகாரங்கள் விளையாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

 

முன்னதாக, கடந்த 60 ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 107 பதக்கங்களை வென்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருந்தார். வீரர்களின் அசைக்க முடியாத உறுதி, இடைவிடாத உத்வேகம் மற்றும் கடின உழைப்பையும் அவர் பாராட்டியிருந்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சாதனை! நமது வியக்கத்தக்க விளையாட்டு வீரர்கள் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 107 பதக்கங்களை வென்றதில் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. நமது வீரர்களின் அசைக்க முடியாத உறுதி, இடைவிடாத உத்வேகம், கடின உழைப்பு ஆகியவை நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. அவர்களது வெற்றிகள், நாம்  நினைவில் கொள்ள வேண்டிய தருணங்களையும்,  நம் அனைவருக்கும் உத்வேகத்தையும்  அளித்துள்ளதுடன், மேலும் சிறந்த செயல்பாட்டிற்கான நமது உறுதிப்பாட்டையும்  மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.” என்று பதிவிட்டிருந்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சூடானில் மரண ஓலம்.. பள்ளியில் கொடூர தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 116 பேர் பலி
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு! சிறப்பு விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!