பல்வேறு அரசுத் துறைகளில் காலிப் பணி இடங்களை நிரப்புவதற்குரிய 71,000 பணி நியமனக் ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை வழங்குகிறார்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் வகையில் ரோஸ்கர் மேளா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நாளை நடைபெற உள்ளது.
காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த நிகழ்வு காலை காலை 10:30 மணிக்குத் தொடங்கும். இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு சிறப்பு ஆற்றுவார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் 71 ஆயிரம் பேருக்கு மின்னணு முறையில் பணிநியமன ஆணைகளையும் பிரதமர் மோடி வழங்குவார்.
Bank Robbery: வங்கியில் கொள்ளையடிக்க வந்த கும்பலை அடித்து விரட்டிய பெண் காவலர்கள்
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேர் அரசுத் துறைகளில் உள்ள ஜூனியர் இன்ஜினியர்கள், லோகோ பைலட்கள், டெக்னீஷியன்கள், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள், ஸ்டெனோகிராபர், ஜூனியர் அக்கவுண்டன்ட், வருமான வரி ஆய்வாளர், ஆசிரியர், செவிலியர், மருத்துவர், சமூக பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான நியமன ஆணைகளைப் பெறுவார்கள்.
பணி நியமன ஆணையைப் பெறும் அனைவருக்கும் கர்மயோகி கையேடு விநியோகிக்கப்படும். கர்மயோகி கையேடு என்பது பல்வேறு அரசு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்படுபவர்களுக்கான ஆன்லைன் வழிகாட்டல் தொகுப்பு ஆகும்.
சிவனுக்கு நண்டுகளை காணிக்கையாகச் செலுத்தவது ஏன்?
10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடன் கடந்த 2022 அக்டோபரில் ரோஸ்கர் மேளா திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடக்க விழாவிலேயே முதல் கட்டமாக 75,000 பேருக்கு அரசுப் பணிகளுக்கான பணிநியமன ஆணைகள் கொடுக்கப்பட்டது சுட்டிக்காட்டத்தக்கது.