உக்ரைன் மீது அணுகுண்டு தாக்குதலா... புடினிடம் பேசி தடுத்து நிறுத்திய பிரதமர் மோடி!

By SG Balan  |  First Published Mar 10, 2024, 7:52 PM IST

நெருக்கடியான சூழலில் அணுகுண்டுத் தாக்குதலைத் தவிர்ப்பதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற நாடுகளின் தொடர்பும் முக்கியப் பங்காற்றியது என்றும் CNN செய்தி அறிக்கை கூறுகிறது.


2022இல் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் வெடித்தபோது, ​உக்ரைன் தலைநகர் ​கீவுக்கு எதிராக ரஷ்யா அணுசக்தித் தாக்குதலுக்கு திட்டமிட்டது என்றும் அதனைத் தவிர்க்க பிரதமர் மோடி ஒரு முக்கியக் காரணமாக இருந்தார் என்று பிரபல ஊடக நிறுவனமான சி.என்.என். (CNN) செய்தி வெளியிட்டுள்ளது.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தி கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே அளவுக்கு பயங்கரமான அணுகுண்டு தாக்கல் நடைபெறக்கூடிய சூழல் இருந்தது என்றும் அந்தச் செய்தியில் கூறப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு மூத்த நிர்வாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவலை சி.என்.என் நிறுவனம் கூறியுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த நெருக்கடியான சூழலில் அணுகுண்டுத் தாக்குதலைத் தவிர்ப்பதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற நாடுகளின் தொடர்பும் முக்கியப் பங்காற்றியது என்றும் அந்தச் செய்தி அறிக்கை கூறுகிறது.

சென்னையில் குவால்காம் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு மையம்; மார்ச் 14ஆம் தேதி திறப்பு விழா

ரஷ்யா போர்க்களத்தில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று அமெரிக்கா கவலை அடைந்தது என்றும் இதனால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில், அத்தகைய தாக்குதலைத் தவிர்க்குமாறு ரஷ்யாவை ஊக்கப்படுத்த, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் ரஷ்யா கேட்டுக்கொண்டது என்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போரில் ரஷ்யா - உக்ரைன் இரு நாடுகளுக்கும் ஆதரவு தெரிவிக்காத அணிசேராத நாடுகளின் உதவியைப் பெற அமெரிக்கா முயன்றது எனவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

"நாங்கள் அவர்களுக்கு நேரடியாக செய்தி அனுப்புவது மட்டுமல்லாமல், மற்ற நாடுகள் மூலம் அழுத்தம் கொடுக்க முயன்றோம். அதே விஷயத்தை அவர்கள் கவனம் செலுத்தக்கூடிய நாடுகளின் மூலம் வலுவாக வலியுறுத்திச் செய்தோம்" என ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிறரிடமிருந்து வந்த அறிக்கைகள் உக்ரைன் மீதான அணு ஆயுதத் தாக்குதல் நெருக்கடியைத் தவிர்க்க உதவியது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். "இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகளின் தலையீடு அவர்களின் சிந்தனையில் சில தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்" என்று அவர் கூறியுள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடர்பாக இந்தியா எப்போதும் குரல் கொடுத்து வந்துள்ளது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொலை செய்யப்படுவதை இந்தியா கண்டித்துள்ளது எனவும் போருக்கு அமைதியான தீர்வு காண அழைப்பு விடுத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

பள்ளி கல்லூரிகளில் போதைப்பொருள்... என்னிடம் பல புகார்கள் வந்துள்ளன: ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை

click me!