
PM Modi Pahalgam Attack Meeting: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கருத்தில் கொண்டு, திடீரென தனது பயணத்தை முடித்துக் கொள்வதற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத்துடன் இருதரப்பு விவாதங்களையும், முக்கிய கூட்டாண்மை கவுன்சில் கூட்டத்தையும் நடத்தினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியாவுக்கான அரசு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (புதன்கிழமை) அதிகாலை இந்தியா திரும்பினார். தாக்குதல் பற்றிய செய்தி கிடைத்தவுடன் பிரதமர் மோடி உடனடியாக ஜெட்டாவிலிருந்து புறப்பட்டு, ராஜதந்திர ஈடுபாடுகளை விட தேசிய பாதுகாப்பு கவலைகளுக்கு முன்னுரிமை அளித்து புது டெல்லியில் தரையிறங்கினார் பிரதமர் மோடி.
விமானத்தில் இருந்து தரை இறங்கியவுடன், பிரதமர் மோடி விமான நிலையத்திலேயே அவசர ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அவருக்கு விளக்கமளித்தனர்.
பிரதமர் மோடியின் சவுதி பயணம் ரத்து
பஹல்காமில் நடந்த தாக்குதல், பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து ஜம்மு-காஷ்மீரில் நடந்த மிகவும் அழிவுகரமான பயங்கரவாதச் செயலாகக் கருதப்படுகிறது. சம்பவத்தின் தீவிரம் காரணமாக, பிரதமர் மோடி சவுதி அரேபியா வழங்கிய அதிகாரப்பூர்வ இரவு உணவைத் தவிர்த்துவிட்டு, ஒரு முழு நாள் முன்னதாக இந்தியா திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளவரசர் முகமது பின் சல்மான் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்த செயலை கடுமையாக கண்டித்து, அப்பாவி உயிர்கள் இழப்புக்கு வருத்தம் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் நிற்க சவுதி அரேபியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
Pahalgam Attack : சவுதி பயணத்தை நிறுத்தி விட்டு அவசர அவசரமாக நாடு திரும்பும் பிரதமர் மோடி!