மோடிக்கு குடும்பமே இல்லை.. 140 கோடி இந்தியர்கள் எனது குடும்பம் தான்.. லாலுவுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி.!

By Raghupati R  |  First Published Mar 4, 2024, 2:53 PM IST

ஊழல், உறவினர், சமாதானம் போன்றவற்றில் மூழ்கி இருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் இப்போது பதற்றமடைந்து, மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்லத் தொடங்கியுள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடந்த ஒரு மெகா பேரணியில் உரையாற்றிய மோடி, “ஊழல், உறவுமுறை ஆகியவற்றில் ஆழ்ந்துள்ள இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பதற்றமடைந்து வருகின்றனர். தற்போது 2024 தேர்தலுக்கான உண்மையான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். நான் அவர்களின் ‘பரிவார்வாதத்தை’ கேள்வி கேட்கும் போது, இவர்கள் இப்போது மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

நேற்று, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், பிரதமர் மோடி "உண்மையான இந்து அல்ல" என்று கூறினார். ஏனெனில் 2022 இல் அவரது தாயார் ஹீராபா மோடி இறந்தபோது அவர் தலை மொட்டையடிக்கவில்லை. மேலும் "மோடிக்கு குடும்பம் இல்லை..." என்று லாலு பிரசாத் கூறினார். இன்றைய கூட்டத்தில் உரையாற்றிய மோடி, "இன்று, நாட்டின் கோடிக்கணக்கான மகள்கள், தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் மோடியின் குடும்பம்.

Latest Videos

undefined

நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழையும் எனது குடும்பம். யாரும் இல்லாதவர்களும் மோடிக்கு சொந்தம், மோடி அவர்களுக்கும் சொந்தம். எனது இந்தியா-எனது குடும்பம், இந்த உணர்வுகளின் விரிவாக்கத்துடன், நான் உங்களுக்காக வாழ்கிறேன், உங்களுக்காக போராடுகிறேன், உங்களுக்காக தொடர்ந்து போராடுவேன், எனது கனவுகளை உறுதியுடன் நிறைவேற்றுவேன்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இது எனது விமர்சகர்கள் அழைப்பது போல் தேர்தல் பேரணி அல்ல. இது இந்தியா முழுவதும் வளர்ச்சியின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தேர்தல் தேதிகள் கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களுக்குப் பிறகும், தெலுங்கானா மக்களின் பங்களிப்புக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை.

2014க்குப் பிறகு, மத்தியில் ஆளும் பாஜக அரசு தெலுங்கானா வளர்ச்சிக்கும், பழங்குடியின மக்களின் கவுரவத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தது. ஒரு பழங்குடியினப் பெண் நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என்று யாராவது கற்பனை செய்திருக்க முடியுமா? பிர்சா முண்டாவின் பிறந்த நாளை தேசிய விழாவாகக் கொண்டாடுவார்கள் என்று யாராவது கற்பனை செய்திருக்க முடியுமா? பழங்குடியினரின் வளர்ச்சிக்காக பாஜக அரசு தனி அமைச்சகத்தை உருவாக்கியது” என்று பேசினார் பிரதமர் மோடி.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முதல் நடிகர் சுரேஷ் கோபி வரை.. பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்?

click me!