மோடியின் சகோதரியான பாகிஸ்தான் பெண்... ஆர்.எஸ்.எஸில் மலர்ந்த சகோதரத்துவம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 15, 2019, 3:59 PM IST
Highlights

பிரதமர் மோடிக்கு பல ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவர் ராக்கி கயிறு கட்டி வருகிறார். 

பிரதமர் மோடிக்கு பல ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவர் ராக்கி கயிறு கட்டி வருகிறார். 

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த கமர் மோஷின் ஷேக், குஜராத்காரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஆமதாபாத்தில் வசித்து வருகிறார்.  மோடி ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்த காலத்திலேயே அவரை சந்தித்து இருக்கிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பே ராக்கி கட்டி சகோதரத்துவத்தை உணர்த்தியுள்ளார் கமர் மோஷின் ஷேக். 

அப்போது முதன் 'ரக் ஷா பந்தன்' பண்டிகையின் போது வருடாவருடம் மோடியை சந்தித்து ராக்கி கயிறு கட்டி வருகிறார். இந்த ஆண்டும் மோடியை சந்தித்து, ராக்கி கயிறு கட்டி பரிசு பொருளை வழங்கியுள்ளார். 

இதுகுறுத்து  மோஷின் ஷேக் கூறும்போது, ‘’ஒவ்வொரு ஆண்டும் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி வருகிறேன். அவரது ஆட்சி  சிறப்பாக அமையவேண்டும் என பிரார்த்திக்கிறேன். அவர், நல்ல உடல்ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்கிறேன்’’ என அவர் கூறினார்.

click me!