Ajith Pawar : மோடி தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று வரும் நிலையில், அஜித் பவார் இணையமைச்சர் பதவியை நிராகரித்துள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக இந்திய நாட்டின் பிரதமராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த பதிவேற்பு விழா டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், அக்ஷய்குமார் மற்றும் முகேஷ் அம்பானி உள்ளிட்ட பலதுறை சேர்ந்த பிரபலங்களும் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு ஆட்சியைப் போல இல்லாமல் இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் தற்போது ஆட்சியை அமைகின்றது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சூழலில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் தங்களுக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வேண்டும் என அஜித் பிரபா அறிவித்திருந்தார்.
undefined
தேசியவாத காங்கிரஸ் அணியின் பிரபுல் பட்டேல் ஏற்கனவே வகித்து வந்த கேபினட் பொறுப்பை கேட்டிருந்த நிலையில், அவருக்கு அதை கொடுக்காமல் இணையமைச்சர் பதவியை பாஜக கொடுத்ததால் அஜித் பவார் தற்பொழுது இணையமைச்சர் பதவியை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜக ஆட்சி அமைக்காத சூழலில் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.
மேலும் அஜித் பவார் வெளியிட்ட அறிக்கையில் எதிர்வரும் சில மாதங்களில் எங்களுக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடைப்பார்கள், ஆகவே நாடாளுமன்றத்தில் எங்களுடைய எண்ணிக்கையானது நான்காக உயரும், ஆகையால் எங்களுக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வேண்டும் என சொல்லியிருக்கிறோம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் தெரிவித்திருக்கிறார்.
பிரதமராக பொறுப்பேற்றார் மோடி.. இளம் அமைச்சர் முதல் வயதான அமைச்சர் வரை.. முழு பட்டியல் இதோ..!