உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு மீண்டும் பதில் கூறியுள்ள பிரதமர் மோடி, அனைத்து சனாதனிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளைக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ள பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சனாதன தர்மத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அவர்களின் கூட்டணி நாட்டின் கலாச்சாரம் மற்றும் குடிமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்” என்று கூறியது நாடு முழுவதும் பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்த கருத்துக்கு தக்க பதிலடி வழங்குமாறு பிரதமர் மோடி மோடி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
undefined
இப்போது, மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் கூட்டணி சனாதன தர்மத்தை அழிக்க விரும்புகிறது என்றார். 'இந்தியா' கூட்டணியை தன் வழக்கம்போல ‘கமண்டியா’ கூட்டணி (அகம்பாவம் பிடித்த கூட்டணி) என்ற பிரதமர் எதிர்க்கட்சிகள் சரிமாரியாக தாக்கிப் பேசினார்.
ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மொபைலுக்கும் இஸ்ரோவுக்கும் சுவாரஸ்யமான தொடர்பு இருக்கு! என்ன தெரியுமா?
"ஒரு சில குழுக்கள் நாட்டையும் சமூகத்தையும் பிளவுபடுத்தும் வேலையைச் செய்கின்றன... அவர்கள் ஒன்றாக இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளனர். அவர்கள் இந்தியாவின் கலாச்சாரத்தைத் தாக்கும் திட்டத்துடன் செயல்பட்டு வருகின்றனர், சனாதனத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானத்துடன் தான் அவர்கள் கூட்டணி உருவாகப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
சனாதன பாரம்பரியத்தை அழிக்கும் நோக்கம் கொண்டது என்றும் இந்தியா கூட்டணியை பிரதமர் விமர்சித்தார். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற அறைகூவல் எல்லை தாண்டிவிட்டது என்றும், அதை அப்படியே விட்டுவிடக் கூடாது என்றும் அவர் கூறினார்.
“இன்று, அவர்கள் வெளிப்படையாக சனாதனத்தை குறிவைக்கத் தொடங்கிவிட்டனர். நாளை அவர்கள் தாக்குதல்களை இன்னும் அதிகரிக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து சனாதனிகளும், நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தகையவர்களை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது கிரிமினல் குற்றம் அல்ல: கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு