இன்று காசி தமிழ் சங்கமம் 2-ம் கட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார் பிரதமர் மோடி.
தமிழ்நாட்டுக்கும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும் இடையே உள்ள பழங்கால தொடர்பை புதுப்பிக்கும் வகையில் மத்திய அரசின் கல்வித்துறை காசி தமிழ் சங்கமத்தை கடந்த ஆண்டு நடத்தியது.
undefined
இந்த ஆண்டும் அதே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 'கே.டி.எஸ்.- 2.0' (காசி தமிழ் சங்கமம் 2-ம் கட்டம்) என பெயரிடப்பட்டு உள்ள இந்த சங்கமம் இன்று தொடங்கியது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பிரதமர் நரேந்திர மோடி இன்று காசியின் நமோ படித்துறையில் காசி தமிழ் சங்கமம் 2023-ஐ தொடங்கி வைத்தார்.
Kashi Tamil Sangamam is an innovative programme that celebrates India's cultural diversity and strengthens the spirit of 'Ek Bharat, Shreshtha Bharat.' https://t.co/tTsjcyJspm
— Narendra Modi (@narendramodi)இதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி - வாரணாசி தமிழ் சங்கமம் ரயிலையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..