பயங்கரவாதத்துக்கு எதிராக ஒற்றுமையுடன் இருப்போம்! எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

Published : May 08, 2025, 11:55 AM ISTUpdated : May 08, 2025, 12:16 PM IST
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒற்றுமையுடன் இருப்போம்! எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

சுருக்கம்

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

PM Modi appealed to opposition parties to stand united: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியைத் தொடர்ந்து, மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று காலை தொடங்கிய கூட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர். 

டெல்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் 

மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கை குறித்தும், எல்லைப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகளிடம் ராஜ்நாத் சிங், அமித்ஷா விளக்கம் அளித்தனர்.

எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் 

ஆபரேஷன் சிந்தூர் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்த நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நமது ராணுவத்தினரின் துணிச்சலையும் வீரத்தையும் எடுத்துரைக்க வேண்டும் என்றும் எனவும் பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டம் வாயிலாக தெரிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?