உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு எத்தனாவது இடம் தெரியுமா?

 
Published : May 09, 2018, 01:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு எத்தனாவது இடம் தெரியுமா?

சுருக்கம்

PM Modi get 9th place in the top 10 most powerful persons in the world

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 9-வது இடத்தைப்
பிடித்திருக்கிறார்.

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ், வர்த்தகம், தொழில், முதலீடு, விற்பனை, உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து
விளங்குபவர்களைத் திறமைகளின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும தேர்ந்தெடுத்து பட்டியல் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் 75 பேர் இடம் பெற்றுள்ளனர். 

சீன அதிபர் ஜி ஜின்பிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த வரும் முதலிடதில் இருந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தற்போது இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

ஒன்பதாவது இடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பிடித்திருக்கிக்கிறார். உலகில் இரண்டாவது மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில், மிகவும் பிரபலமான மனிதராக மோடி திகழ்கிறார் என்றும், 2016 ஆம் ஆண்டில் கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் துணிச்சலானது என்றும் பிரதமர் மோடியின் செயல்பாட்டை ஃபோர்ப்ஸ் புகழ்ந்துள்ளது.

ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க் 19-வது இடத்திலும், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே 14-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். 75 இடங்களைப் பிடித்திருக்கும் தலைவர்கள், உலகை மாற்றி அமைக்கும் சக்தியைப் படைத்தவர்கள் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!