11 நாள் விரதத்தை முடிந்து சடங்குகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக கோவிந்த் தேவ் கிரி மஹாராஜும் பிரதமர் மோடியின் பக்தியைப் பாராட்டினார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடந்த ‘பிரான் பிரதிஷ்டா’ விழாவுக்குப் பிறகு பிரதமர் மோடி தனது தனது 11 நாள் விரதத்தை திங்கள்கிழமை முடித்துக்கொண்டார்.
கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் பிரதர் மோடிக்கு 'சரணமித்' என்ற இனிப்பு கலந்த பாலை ஊட்டிவிட்டார். இதன் மூலம் பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயில் திறப்புக்காக மேற்கொண்டிருந்த 11 நாள் விரதத்தை முடித்துக்கொண்டார். விரதத்தை முடிந்து வெற்றிகரமாக சடங்குகளை நிறைவு செய்ததற்காக கோவிந்த் தேவ் கிரி மஹாராஜ் பிரதமர் மோடியைப் பாராட்டினார்.
அயோத்தியில் ராம் லல்லா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 நாட்கள் சிறப்பு சடங்குகள் செய்வதற்காக பிரதமர் மோடி ஜனவரி 12 அன்று தான் விரதம் இருக்கத் தொடங்குவதாக அறிவித்தார்.
ராமர் சிலை முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கிய பிரதமர் மோடி!
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இருந்த பிரதமர் மோடி இந்த தனது விரதத்தை முடித்துக் கொண்டார். pic.twitter.com/tlK8D5QRwz
— Asianetnews Tamil (@AsianetNewsTM)தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஆடியோ வெளியிட்ட பிரதமர் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சுப நிகழ்வுக்கு சாட்சியாக இருப்பது தனது அதிர்ஷ்டம் என்று கூறினார்.
"ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. கும்பாபிஷேகத்தின்போது இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்த கடவுள் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்களுக்கு சிறப்பு வழிபாட்டைத் தொடங்குகிறேன்" என்று தனது ஆடியோ செய்தியில் கூறினார்.
அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை: சிறப்பு பிரசாத பெட்டியில் என்னென்ன பொருட்கள் உள்ளது தெரியுமா?