பிரதமர் மோடியின் முதல் கையெழுத்து.. 9.3 கோடி விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார்..

Published : Jun 10, 2024, 12:02 PM IST
பிரதமர் மோடியின் முதல் கையெழுத்து.. 9.3 கோடி விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார்..

சுருக்கம்

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிடுவதற்கான தனது முதல் கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

டெல்லியில் உள்ள அலுவலகத்தில் முறையாக பிரதமராக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. இந்த நிலையில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிடுவதற்கான தனது முதல் கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் மற்றும் சுமார் 20,000 கோடி ரூபாய் வழங்கப்படும். கோப்பில் கையெழுத்திட்ட பிறகு, பிரதமர் மோடி, "எங்கள் அரசு விவசாயிகளின் நலனுக்காக முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது.

எனவே பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகள் நலன் தொடர்பானது என்பது பொருத்தமானது. வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்கு இன்னும் அதிகமாக செய்ய விரும்புகிறோம்." என்று தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஜீன்ஸ், மஞ்சள் டிரஸ் போடக்கூடாது.. சமோசா சாப்பிட இந்த நாட்டில் தடை.. என்னங்க சொல்றீங்க..

விவசாயிகளுக்கான நிதி வழங்கும், PM KISAN FUND திட்டத்தின் கீழ், 9.3 கோடி விவசாயிகளுக்கு ₹20,000 கோடி நிதியை விடுவிக்க முதல் கையெழுத்திட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 

2026ல் விஜயின் தவெகவுக்கு செக்.. கமல் உடன் திமுக போட்ட பிளான்.. குறுக்கே வந்த பாஜக + நாதக கூட்டணி..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!