எம்.எல்.ஏ.வை கொல்ல முயற்சி... திட்டம் போட்டவனை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய போலீஸ்...!

By Kevin KaarkiFirst Published May 31, 2022, 1:01 PM IST
Highlights

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பரெஷ் ராம் தாஸ் தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை கொலை செய்ய திட்டமிட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். மே 18 ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பரெஷ் ராம் தாஸ் தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சட்டமன்ற உறுப்பினர் கொடுத்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

போலீஸ் விசாரணையில் சிரன்ஜித் ஹல்தர் என்கிற சிரன் சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய திட்டமிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கமல் முல்லிக் என்பவரை கொலை செய்த விவகாரத்திலும் சிரன் மற்றும் அவரின் கூட்டளிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. கைதான சிரன் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

கொலை செய்ய திட்டம்:

ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சிரன், அங்கு இருந்த படி சட்டமன்ற உறுப்பினரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சிரன் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். வெளியே வந்த சிரன் பசந்தி பகுதியை சேர்ந்த மொனிருல் என்ற நபருடன் சுற்றி இருக்கிறார். சில நாட்களுக்கு முன் மொனிருல் என்ற நபர் சட்டமன்ற உறுப்பினருக்கு போன் செய்து, தன்னை கொல்ல திட்டமிட்டுள்ளது பற்றி கூறி இருக்கிறார்.

காவல் நிலையத்தில் புகார்:

தனக்கு வந்த கொலை மிரட்டல் பற்றி சட்டமன்ற உறுப்பினர் பரெஷ் ராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை கொலை செய்ய திட்டமிடுவோர் பா.ஜ.க. ஆதரவாளர்கள் என சட்டமன்ற உறுப்பினர் பரெஷ் ராம்  தெரிவித்து உள்ளார். 

இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு முன்விரோதம் கொண்டு செயல்படுகின்றனர் என்று மாநில பா.ஜ.க. உறுப்பினர் சுனிப் தாஸ் தெரிவித்தார். கேனிங் காவல் நிலைய போலீசார் திங்கள் கிழமை அதிரடி சோதனை நடத்தி முக்கிய குற்றவாளியான சிரன்ஜித் ஹல்தர் என்கிற சிரனை நரேந்திரபூரில் வைத்து கைது செய்தனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட இருக்கும் சிரனை, பத்து நாட்கள் விசாரணைக்கு எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

click me!