ரூ.35க்காக ரயில்வே துறையுடன் 5 வருடம் போராடிய தனி நபர்..! போராட்டத்தால் 3 லட்சம் பேருக்கு பயன்

By Ajmal KhanFirst Published May 31, 2022, 11:19 AM IST
Highlights

ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்ட போது  35 ரூபாய் கூடுதலாக பிடிக்கப்பட்டதற்காக, தனி நபர் ஒருவர் 5 ஆண்டு கால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.இதன் காரணமாக 3 லட்சம் பேர் பயன்அடைந்துள்ளனர்.
 

ரூ.35 பிடித்தம் செய்த ரயில்வே துறை

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் பொறியாளர் சுஜீத் சுவாமி, இவர், 2017 ஜூலை 2ல், கோட்டாவில் இருந்து புதுடில்லி செல்வதற்காக, 'கோல்டன் டெம்பிள் மெயில்' என்ற ரயிலில் ஐ.ஆர்.சி.டி.சி., வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்தார். இந்த முன்பதிவை 2017, ஏப்ரலில் மேற்கொண்டார். இதற்காக, 765 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயிலில் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்ட காரணத்தால் தனது பயணத்தை சுஜீத் சுவாமி ரத்து செய்துள்ளார். இதற்கான 100 ரூபாய் கட்டணம் பிடிக்கப்பட்டு 665 ரூபாய் சுவாமியின் வங்கி கணக்கில்  திரும்ப வந்துள்ளது. எதற்காக 100 கட்டணம் பிடிக்கப்பட்டது தொடர்பாக சுவாமி ரயில்வே நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ரயில்வே துறை ரயில் டிக்கெட் ரத்து கட்டணமாக 65 ரூபாயும், ஜி.எஸ்.டி கட்டணமாக 35 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதனால் கடும் விரக்தி அடைந்த சுவாமி 

2 ரூபாய்க்காக 3 வருட போராட்டம்

ஜிஎஸ்டி 2017 ஆம் ஆண்டு  ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த நிலையில் அதற்கு முன்னதாகவே தனது டிக்கெட்டை ரத்து செய்து விட்ட நிலையில் எப்படி ஜி.எஸ்.டி பிடிக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து தனது 35 ரூபாயை பெறுவதற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக ரயில்வே மற்றும் மத்திய நிதி அமைச்சகம், தகவல் அறியும் உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு 50க்கும் மேற்பட்ட மனுக்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக அனுப்பி போராடியுள்ளார். இதனையடுத்து கடந்த 2019ல் ரயில்வே துறை சார்பாக 33 ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீதமுள்ள ரூ.2க்காக மீண்டும் 3 வருடங்களாக போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.

3 லட்சம் பேர் பயன்

இந்த போராட்டத்திற்கு  கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவு கிடைத்துள்ளது. 5 வருட போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த சுஜீத் சுவாமி, தனது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும், திங்கட்கிழமை எனது வங்கி கணக்கிற்கு ரூ.2 திரும்ப வந்ததாக தெரிவித்துள்ளார்.  இதன் காரணமாக சுமார் 3 லட்சம் பேரிடம் இருந்து  2.43 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது  என்ற தகவல் மன நிம்மதியை தந்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து பிரதமர் நிவாரண நிதிக்கு 535 ரூபாய் அனுப்பிவைத்தாக சுஜீத் சுவாமி தெரிவித்துள்ளார்.

click me!