சட்டவிரோத நடவடிக்கைகளையில் ஈடுபட்டதற்காக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்தியஅரசு விதித்த தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
சட்டவிரோத நடவடிக்கைகளையில் ஈடுபட்டதற்காக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்தியஅரசு விதித்த தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
தீவிரவாத செயல்களுக்கு உதவி, நிதியுதவி செய்தல், தேசவிரோத செயல்களில் ஈடுபடுதல், கலவரங்களைத் தூண்டுதல் போன்ற சட்டவிரோத மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஈடுபட்டது.
பாப்புலர் பிரண்ட் ஆப்இந்தியா நிர்வாகிகள், ஆதரவாளர்கள்உள்ளிட்டோர் வீடுகளில் நாடுமுழுவதும் என்ஐஏ, அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்தியதில் ஏராளமான ஆவணங்கள், கணக்கில் வராத பணம் போன்றவை கைப்பற்றப்பட்டது.
தடை செய்யப்பட்ட அமைப்பான சிமியில் உறுப்பினர்களாகத் தலைவர்களாக இருந்தவர்கள்தான் பிஎப்ஐ அமைப்பிலும் இருந்தனர், ஜமாஜ் உல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு உள்ளிட்டபல்வேறு தீவிரவாத அமைப்பில் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 28ம் தேதி மத்தியஅரசு, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் பிஎப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு விதித்த தடை மற்றும் மாநிலஅரசு விதித்த தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிஎப்ஐ அமைப்பு சார்பில் பெங்களூரைச் சேர்ந்த அந்த அமைப்பின் தலைவர் நசீர் அலி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
பிஎப்ஐ அமைப்பு சார்பில் வழக்கறிஞர் ஜெயகுமார் பாட்டீல்ஆஜராகினார், அவர் தாக்கல்செய்த பிரமாணப்பத்திரத்தில் “ பிஎப்ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை என்பது சட்டவிரோதமானது, சட்டவிரோத அமைப்பு என்று கூறுவதற்கு எந்தவிதமான காரணங்களும் கூறப்படவில்லை”எனத் தெரிவித்தார்
மத்திய அ ரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார். அவர் வாதிடுகையில் “ பிஎப்ஐ அமைப்பு, பல்வேறு தேச விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது. தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டு ஏராளமான சட்டவிரோத நடவடிக்கைகளில் பிஎப்ஐ அமைப்பு ஈடுபட்டுள்ளது” எனத் தெரிவித்தார்
கேரளாவில் இருந்து கத்தாருக்கு 5 குழந்தைகளுடன் ஜீப் ஓட்டிச் சென்ற கேரளப் பெண்
இந்த வழக்கு நீதிபதி எம். நாகபிரசன்னா முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அ ரசு விதித்த தடை செல்லும் என்று கூறி மனுதாரர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.