100 ரூபாயைத் தொடுமா பெட்ரோல் விலை !! பொது மக்களுக்கு காத்திருக்குது அதிர்ச்சி !!

 
Published : Jan 23, 2018, 06:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
100 ரூபாயைத் தொடுமா பெட்ரோல் விலை !! பொது மக்களுக்கு காத்திருக்குது அதிர்ச்சி !!

சுருக்கம்

petrtol price hike.per litre 75 Rupees

பெட்ரோல் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லிட்டர் ஒன்றுக்கு 75 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆடத்த சில நாட்களில் 1 லிட்டர் பெம்ரோல் 100 ரூபாய் அளவுக்கு உயரும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கச்சா  எண்ணெயின்  சர்வதேச விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.

இதையடுத்து  கடந்த ஆண்டு ஜுன் மாதம் 16 ஆம் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக வருவதால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இந்த நடைமுறை பொது மக்களை ஏமாற்றும் செயல் என்றும், நாள்தோறும் கொஞ்சம், கொஞ்சமாக விலை உயர்த்தப்படுவதால் முதல்ல்  சாதாரணமாக தெரிந்தாலும், நாள் ஆக,ஆக பெட்ரோல் விலை கடுமையாக உயரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது பெட்ரோலின் விலை 15 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.75.06 ஆகவும், டீசலின் விலையில் 20 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.66.64 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.06 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 20 காசுகள் உயர்ந்து ரூ.66.64 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை உயர்ந்திருப்பது பொது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

பெட்ரோல் விலை அடுத்தடுத்த நாட்களில் லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயைத் தொடும் என்பதால் எப்படி சமாளிக்க போகிறோமோ என இரு சக்கர வான ஓட்டிகள் கதி கலங்கிப்போயுள்ளனர

PREV
click me!

Recommended Stories

மாற்றப்படும் நிதின் கட்கரி? மத்திய அமைச்சரவையில் மாற்றமா? உண்மை நிலவரம் என்ன?
ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!