
பெட்ரோல் - டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அக்.13 ஆம் தேதி நடக்க இருந்த பெட்ரோல் பங்க் ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பெட்ரோல் - டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்வதற்கு எதிர்ப்பு, 6 மாதத்துக்கு ஒரு முறை பெட்ரோல் - டீசல் டீலர்களுக்கான கமிஷன் தொகையை மாற்றி அமைத்தல், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல் - டீசல் விலை வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சார்பில் வரும் 13 ஆம் தேதி அடையாள ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் இம்மாதம் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் 54 ஆயிரம் பெட்ரோல் - டீசல் பங்குகள் மூடப்பட்டிருக்கும்.
இந்நிலையில், அக்.13 ஆம் தேதி நடக்க இருந்த பெட்ரோல் பங்க் ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.